Wednesday, December 26, 2012

வேலுவின் நீதிக்கதைகள் -2


வேலுவின் நீதிக்கதைகள் பற்றி அறியாதவர்களுக்கு வேலுவின் நீதிக்கதைகள் -1

வேலுவே எழுதிய நீதிக்கதை :




ஒரு காட்டுல ஒரு பாட்டி வடை சுட்டு வித்துட்டு இருந்தாளாம். காட்டு மிருகமெல்லாம் அங்க வந்து வடை வாங்கி சாப்பிட்டு போகுமாம்.அந்த காட்டுல ஒரு காக்காவும் இருந்துச்சாம். அதுக்கு வடை சாப்பிடனும்னு ரொம்ப நாள் ஆசையாம். ஆனா பாவம் அது கிட்ட வடை வாங்க காசே இல்லையாம். என்ன பண்ணலாம்னு சோகமா யோசிச்சிட்டு இருக்கும் போது ஆமை வந்து என்ன பிரச்சனை ஏன் சோகமா இருக்கேன்னு கேட்டுச்சாம். காக்காவும் வடைய பத்தி சொல்லுச்சாம். ஆமை, நீ பாட்டி அசந்த நேரம் பார்த்து வடைய தூக்கிட்டு வந்துடுன்னுச்சாம்.

ரெண்டு நாள் கழிச்சி ஆமை வந்துச்சாம் என்ன ஆச்சு வடையை தூக்கிட்டியான்னு கேட்டுச்சாம். அட நீ வேற விடப்பான்னுச்சாம். ஏம்ப்பா என்ன ஆச்சுன்னுச்சாம் ஆமை. நான் வடைய தூக்க போகும் போதெல்லாம் மாட்டிக்கிறேன் எனக்கு லாங்க் சைட் வேறையா கிட்ட போகும் போது எது வடை சட்டி எது எண்ணெய் சட்டின்னே தெரிய மாட்டேங்குது. ஒண்ணு பாட்டிக்கிட்ட மாட்டிக்கிறேன் இல்லைன்னா எண்ணெய் சட்டில சூடு வச்சிக்கிறேன் அப்படின்னுச்சாம் காக்கா.
சரி ஒண்ணு பண்ணுவோம் என்னை தூக்கிட்டு நீ பற எனக்கு தான் கண்ணு நல்லா தெரியுமே நான் வடைய திருடுறேன். ரெண்டு பேரும் ஆளுக்கு பாதியா வடைய ஷேர் பண்ணிப்போம்னுச்சாம் ஆமை. காக்காவும் ஒகேன்னு சந்தோஷமா சொல்லிச்சாம்.

அடுத்த நாள் ஆமைய தூக்கிட்டு காக்காவும் வடையை திருட போச்சாம். வடை சட்டிக்கு கிட்ட போகும் போது வெயிட் தாங்காம ஆமையை கீழ போட்டுடுச்சாம். ஆமை பாட்டி வச்சிருந்த மாவு சட்டிக்குள்ள விழுந்துடுச்சாம். பாட்டிக்கும் லாங்க் சைட்டாம் சோ பாட்டி ஆமை விழுந்தத கவனிக்காம ஆமைய மாவுல பொரட்டி அப்படியே எண்ணெய் சட்டிக்குள்ள போட்டுட்டாங்களாம். 

நீதி:அப்போ கண்டுபிடிச்சது தான் ஆமை வடை  

காட்டுக்குள்ளே பயங்கரம்... 



வேலுவும் அவனோட ஃபிரெண்டும் சேர்ந்து ஒரு நாள் போரடிக்குதுன்னு காட்டுக்கு ட்ரெக்கிங் போனாங்களாம். காட்டுக்குள்ள ரொம்ப தூரம் வேடிக்கை பார்த்துட்டே போயிட்டு இருந்தாங்களாம். ஒரு இடத்தில குளம் ஒண்ணு இருந்துச்சாம். அதுல இறங்கி குளிக்க போனாங்களாம். கால தண்ணில வைக்க போகும் போது சிறுத்தையோட சத்தம் கேட்டுச்சாம். திரும்பி பார்த்தா நிஜாமாவே சிறுத்தை நின்னுட்டு இருந்துச்சாம். அதுவும் தண்ணி குடிக்க வந்திருக்கும் போல. வேலுவும் அவன் பிரெண்டும் அத பார்த்துட்டு பயந்து ஓடினாங்களாம். ஓடும் போது வேலு, “மச்சி சிறுத்தை கிட்ட எல்லாம் ஓடி தப்பிக்க முடியாது நாம எதாவது மரத்து மேல ஏறிக்கலாம்“னு அவன் பிரெண்டுகிட்ட சொல்லிட்டு குடுகுடுன்னு போய் ஒரு மரத்துல ஏறிக்கிட்டானாம். அவன் பிரெண்டும் பின்னாடியே வந்து மரத்துல ஏறினானாம். துரத்திட்டு வந்த சிறுத்தை பொறுமையா மரத்து மேல ஏறி வந்து கிட்ட இருந்த வேலுவோட பிரெண்ட சாகடிச்சி துக்கிட்டு  போயிடிச்சாம்.........


நீதி :சிறுத்தைக்கு மரம் ஏற தெரியும்......

Saturday, December 1, 2012

தூங்குதலின் குறிப்புகள்....

குப்புறபடுத்தலின் குறிப்புகள்....





  • மல்லாkக படுத்து யோசிப்பதை விட குப்புற படுத்து யோசித்தால் சிந்தனை எளிதில் வசப்படும்
  • மல்லாக்க படுப்பதென்பது மனிதனுக்கு மட்டுமே உரியது என்பதால் இயற்கையோடு இணைய குப்புறபடுப்பதே சிறந்ததென்பது என் எண்ணம்..
  • தொப்பை கரைய குப்புறபடுக்கலாம் என்பது புத்திசாலி சோம்பேறிகளின் உடற்பயிற்சி சிந்தனைகளில் ஒன்று...
  • இரவில் தூங்கும்போது நமக்குச் சிறகு முளைத்தால் குப்புறபடுத்தவன் அப்படியே பறந்துவிடலாம் மல்லாக்கப்படுத்தவன் புரண்டு பறக்க வேண்டும்..
  • குழந்தையாய் இருக்கும்போது தானே புரண்டு குப்புறப்படுப்பதே நாம் தவழ,நடக்க எடுக்கும் முதல் முயற்சி....
  • எதிர்காலத்தில் நின்றுகொண்டே தூங்குமாறு பரிணாம குழப்பம் ஏற்படலாம் என்றால் இப்போதே குப்புறபடுத்தி பழக்கபடுத்தி கொள்ளுதலே நல்லது
  • மின்சாரம் இல்லாத நேரத்தில் மல்லாக்க படுத்து ஓடாத மின் விசிறியை பார்த்து ஆட்கொணா துயரில் ஆழ்வதற்கு குப்புறபடுத்தலே மேல்..
மல்லாக்கப்படுத்தலின் குறிப்புகள்....





  • மல்லாக்கப் படுத்தல் மனித இனத்திற்கு மட்டுமே உரிய பகுத்தறிவு குணங்களில் ஒன்று...
  • மல்லாக்கப் படுத்து கொஞ்ச நேரமே ஓடும் மின் விசிறியை வெறித்து பார்த்துக்கொண்டிருப்பது தமிழ் நாட்டின் தற்கால தியான முறைகளில் ஒன்று..
  • ஏஞ்சலோவின் ஓவியங்களில் பல உருவங்கள் மல்லாக்க படுத்து கொண்டிருப்பதிலிருந்து இது ஆதி கால பழக்கம் என்பதை அறியலாம்..
  • பெரும்பாலும் திரைப்படங்களில் தூங்கி எழும் காட்சியில் மல்லாக்க படுத்திருந்து எழுவதிலிருந்து இது நாகரீக பழக்கம் என்பதையும் அறியலாம்.
  • பெரும்பாலும் புத்தகங்கள் மல்லாக்க படுத்துக் கொண்டுத்தான் படிக்கபடுகிறது என்பதால் இது கல்வி வளர்ச்சியின் தூண்டுகோலாகவும் அமைகிறது..
  • தூக்கத்திலிருந்து எழுந்திருக்க வேண்டி வந்தால் மல்லாக்க படுத்திருப்பவன் அப்படியே எழலாம் குப்புறபடுத்திருப்பவன் புரண்டு எழ வேண்டும்....

Tuesday, October 2, 2012

ஆறு கால் பிராணி




கால்களின் ஓரத்தில் ஆறு கால் பிராணி ஒன்று இடது காலின் பக்கத்தில் இருந்த எனது வலது காலை உராசிக்கொண்டு சென்றது.பிரமையா இருக்கும்னு விட்டுட்டேன் பிரமையா தான் இருக்கனும்.

முன்பு ஒரு நாள் கனவில் நாலு கால் பிராணி ஒன்று துள்ளிகுதித்து ஓடியது, 
நான் அதை முயல் அல்லது நாய் என்று சந்தேகப்பட்டேன் இப்போது தான் தோன்றுகிறது தூக்கத்தில் சரியாக கவனிக்காமல் விட்ருக்கலாம் அதற்கு ஆறு கால்கள் இருந்திருக்குமோ ???

அந்த ஆறுகால் பிராணியை பிடிக்காமல் விட்டதற்கு இன்னோரு காரணமும் உண்டு. பொதுவாக ஆறு கால் பிராணிகளுக்கு எந்த வகை உணவு அளிப்பது என எந்த புத்தகத்திலும் இல்லை.நான் ஒரு வேளை அதை பிடிக்கும் வேலை அது உணவு அருந்தும் வேளையாக இருந்தால் வேறு எந்த உணவும் கிடைக்காமல் நம்மை உண்டு விடும் சாத்தியகூறுகளும் உண்டு.

ஆறுகால் பிராணிகளின் வேகம் பற்றி முன்னமே நான் ஒரு ரகசிய புத்தகத்தில் படித்தது உண்டு. அவை வாயு வேகம் மனோவேகம் போன்ற வேகங்களில் செல்லாமல் சாதாரண நாலு கால் பிராணிகளின் வேகத்திலேயே செல்லுமென ஆனால் இந்த ஆறுகால் பிராணி நான் பார்த்து பிடிக்காலாமா என யோசனை செய்யும் முன்பே ஓடி விட்டது .இதிலிருந்து நான் தெரிந்து கொண்டது ஆறுகால் பிராணிகள் யோசனை வேகத்தை விட அதிக வேகத்தில் செல்லும். அந்த புத்தகத்தை உடனடியாக திருத்த வேண்டும்.

இந்த சமயத்தில் திடீரெனெ ஒரு சந்தேகம் வந்தது ஆறு கால் பிராணிகளுக்கு படிப்பறிவு இருக்குமா என்று இந்த சந்தேகம் பார்த்து என்னை முட்டாள் என நினைக்க வேண்டாம். பொதுவாக இரண்டு கால் பிராணியான நமக்கு படிப்பறிவு உண்டு ஆனால் பலமில்லை ஆனால் நான்கு கால் பிராணிகளுக்கு பலமுண்டு படிப்பறிவு இல்லை 4+2=6 என்று நான் 2ம் வகுப்பில் படித்ததன் விளைவாக ஆறு கால் பிராணிகளுக்கு பலம்,படிப்பறிவு இரண்டும் இருக்கும் என நினைத்திருந்தேன் ஆனால் ஆறுகால் பிராணிகள் எந்த பள்ளியிலும் படித்து நான் பார்த்ததில்லை எனவே தான் அந்த சந்தேகம் வந்தது.

அந்த ஆறுகால் பிராணி பற்றி நண்பனிடம் சொல்லிக்கொண்டிருந்தேன் கூகுளில் சென்னையில் மன நல மருத்துவர்கள் இருக்குமிடங்கள் பற்றி தேடிக்கொண்டிருந்தான்.ஆறுகால் பிராணி பற்றி தெரிந்த ஒரே ஒரு இரண்டு கால் பிராணியும் அதை பற்றிய செய்தியை உலகிற்கு தெரிவிக்காமல் போக போகிறது..............

Tuesday, July 24, 2012

நம்பி



மந்திரியரே உங்களுக்கே தெரியும் இந்த நாட்டின் மானம்,மரியாதை இது வரை என் பரம்பரை கட்டிக்காத்த கவுரவம் எல்லாம் இப்போது உங்கள் கைகளில். நீங்கள் எடுக்கும் முடிவு எனக்கு,உங்களுக்கு மட்டுமல்ல இந்த நாட்டின் மன்னன் மீது நம்பிக்கை வைத்திருக்கும் லட்சோப லட்சம் மக்களுக்கும நன்மை பயக்க போகும் முடிவு ஆனால் இது வரை அந்த முடிவை பற்றி எதுவுமே சொல்லவில்லை நீங்கள். குறைந்தபட்சம் அதை பற்றிய ஆலோசனை கூட கேட்கவில்லை.மனதில் பட்டதை சொல்லுங்கள் நீங்கள் ஒருவர் மட்டும் மந்திரியில்ல மற்ற மந்திரிகளையும் ஆலோசிக்க வேண்டும்.உங்களையே நம்பி இருக்கிறேன் விரைவில் உங்கள் முடிவை சொல்லுங்கள்.


என்ன சார் இது கவர்மென்ட் ஆபிஸ்ல வேலைக்கு சேந்துட்டா எந்த வேலையும் பண்ண வேண்டாம்னு நினைச்சிட்டிங்களா? எனக்கு மேலையும் ஒரு ஆபிசர் இருக்காரு.அவருக்கு நான் பதில் சொல்லியாகனும் ஒரு வேலையை முடிக்க சொல்லி ஒரு வாரமாச்சி.இது வரைக்கும் ஒரு ஸ்டெப்பாவது எடுத்திருப்பிங்களா? என்னவோ ஆபிசே உங்கள நம்பி தான் இருக்கா மாதிரி வேலை செய்யுறிங்க.நிங்க இல்லைன்னாலும்  ஆபிஸ் நடக்கும் புரிஞ்சதா ?.என்ன பண்ணுவிங்களோ நாளைக்கு அந்த வேலைய முடிச்சிருக்கணும்.

வொர்க் பண்ண இஷ்டமில்லைன்ன புராஜெக்ட் ஆரம்பிக்கும் போதே  மாட்டேன்னு சொல்லி இருக்கணும். இப்போ புராஜக்ட் முடியுற சமயத்துல வந்து இன்னும் ஸ்டார்டிங் ஸ்டேஜ்லையே இருக்கேன்னு சொன்னா என்ன பண்றது.நீங்க எனக்கு மட்டும் தான் பதில் சொல்றிங்க.நான் புராஜக்ட் லீடர் ,மேனேஜர்.கிளையன்ட் எல்லாருக்கு பதில் சொல்லனும் இது தேவையா எனக்கு. என்னால ஒன்னும் பண்ண முடியாது இன்னும் ஒரு வாரத்துல உங்க மாட்யூல் கம்ப்ளிட் ஆகி இருக்கனும் நிங்க 24 மணி நேரம் வொர்க் பன்னாலும் எனக்கு ஒகே தான்.அண்டர்ஸ்டாண்ட் ஒன்  திங் கம்பனி உங்கள நம்பி மட்டுமே இல்லை.

இவ பெட் ரூமுக்கு காபி எடுத்து வந்து திட்டிக்கிட்டே கொடுக்குறதுக்கு பதில் நாமேளே ஹாலுக்கு போய் குடிச்சிடலாம்."ம்ம்க்கும் நல்ல நாள்லயே ஒரு வேலை செய்ய மாட்டார் இந்த லட்சணத்துல வேலைக்கு வேற கிளம்புறார் கிட்ட வருவாரா " "நாமளே  குழந்தைய எழுப்பி ஸ்கூலுக்கு அனுப்பிட்டு இவருக்கு வேற சமைக்கணும் ஒரு ஒத்தாசை உண்டா " "நான் வாங்கி வந்த வரம் அப்படி" "நமக்கு உதவி செய்ய வேண்டாம் இவரோட வேலையாவது செய்யலாம்ல " "காலைலயே எதுக்கு இப்போ கத்திட்டு இருக்க ?" "போன வரமே  உங்கள கரெண்ட் பில் கட்ட சொன்னேன்ல இப்போ கடைசி நாளும் முடிஞ்சிடிச்சி இப்போ பைன் போட்டு கட்டனும் உங்கள நம்பி ஒரு வேலை சொன்னதுக்கு இது தான் நிலைமை" 

கனவுகளுக்கான காரணம் புரிய ஆரம்பித்தது எனக்கு ........


Wednesday, July 11, 2012

சிதறல்


வேலு தனக்கான இமெயில் முகவரியை துவக்கினான்....

முதல் நாள் கல்லூரிக்கு சென்றபோது பள்ளிக்கு சென்றதைபோல் அழுகை வராமல் சந்தோஷமாகத்தான் இருந்தது . இன்னும் நான்கு வருடத்தில் ஒரு இஞ்ஜினியர். இனி காலையில் சென்றதுமே பிரேயரில் கால் கடுக்க நிற்க வேண்டியது இல்லை,அந்த முட்டிக்கால் முட்டும் பெஞ்சில் சாயங்காலம் வரை உட்கார்ந்திருக்க வேண்டியதில்லை, கேரியரில் சாப்பாட்டை எடுத்து வந்து அதை அடுத்தவனுக்கு தெரியாமல் பாதுகாக்க வேண்டியதில்லை, முக்கியமாக பென்சிலில் படம் வரைய வேண்டியதில்லை பேனாவிலையே படம் வரையலாம் என பக்கத்து வீட்டு அண்ணா சொன்னான்.

வேலு கூகுளில் PN junction டையோடின் குண நலன்களை பற்றி தேடி கொண்டிருந்தான்......

எனது முன்னோர்களை போல் நான் பள்ளிக்கூட மாணவர்களிடம் அடை பட்டிருக்கவில்லை,எழுதி எழுதி ஆயுள் காலத்தை உடனே முடித்து கொள்வதற்கு. நான் ஒரு கல்லூரி மாணவனிடம் சேர்ந்திருந்தேன் அவன் தினத்துக்கு நாலு பக்கம் எழுதுவதே குறைவு. அதுவும் ஆசிரியர் பார்க்கும் போது எதையேனும் சும்மா கிறுக்குவான் அவ்வளவே. சந்தோஷம் தான் என்றாலும் என் இனத்தை நினைத்து பரிதாபமாக உள்ளது காலம் காலமாக நாங்கள் மனிதனுக்கு உபோயாகப்பட்டாலும் மற்றவற்றின் பரிணாம வளர்ச்சியோடு ஒப்பிடும் போது நாங்கள் வளரவேயில்லை தொட்டு எழுதும் பேனா, மை பேனா,பால் பாயிண்ட் பேனாவோடு நின்று போனோம் (சில சிறப்பு உபோயக பேனாக்களை தவிர ). ஆனாலும் பரவாயில்லை இந்த காலத்திலும் பெரும்பாலான தேர்வுகளை எழுதுவதற்கு பேனாக்களே உபோயகப்படுகின்றன அந்த மட்டில் சந்தோஷம்.

வேலு இணையத்தில் பலான படம் பார்த்து கொண்டிருந்தான்.......

முன்பு எல்லாம் என்னை ஒரு மதிப்பீட்டுக்கு பயன்படுத்தினர் ஒரு குருகுலத்தில் சேர்ந்தவன் கற்கவேண்டியவற்றை எவ்வாறு கற்றான் என்பதை என்னை பயன்படுத்தி தெரிந்து கொண்டனர். பாடசாலைகளில் பாடத்திட்டத்தை மாணவன் முழுவதுமாக பயின்றுவிட்டானா என்பதை என்னை பயன்படுத்தி தெரிந்து கொண்டனர். இப்போது அதிக மதிப்பெண் ஜாதி,குறைந்த மதிப்பெண் ஜாதி என்று என்னை பயன்படுத்தி ஜாதிகள் உருவாக காரணமாகி போனேன். தனது இளமையை பாடசாலையில்,வீட்டில்,டீயுஷன் செண்டரில் தொலைத்து என்னை எழுதி அதிக மதிப்பெண் பெறுபவன் மட்டுமே வாழ்வில் ஜீவித்திருக்க முடியும் என்று மக்கள்  நினைக்கும் அளவுக்கு மாறி போனேன். நான் தேவையற்றவன் என்று கருதும் ஒரு சில சமுக அறிஞர்களுக்கும் என்னை நீக்க வழி தெரிந்திருக்கவில்லை.

வேலு தனது கல்லூரி வாழ்க்கையை முடித்து ஒரு அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்தான்......

Friday, June 1, 2012

நிலவில் ஒரு வீட்டு மனை....


ராயல் மூன் சிட்டி …ஒருங்கிணைந்த ஸ்பேஸ் ஷிப் நிலையத்திற்கு அருகே அழகான நகரம்..15 அடி ஆழ்த்தில் நல்ல தண்ணிர்..தரமான சாலை வசதி..சுகாதரமான சூழல்….பூங்காவுடன் கூடிய விளையாட்டு மைதானம்..அருகிலையே புதன் கிரகத்தில் பள்ளியும்..செவ்வாய் கிரகத்தில் இஞ்ஜினியரிங் கல்லூரியும் உள்ளன…மனையை பார்வையிட வாகன வசதி..முதலில் புக்கிங் செய்யும் 300 நபர்களுக்கு ஸ்பேஸ் கார் இலவசம்..குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் 2 அதிர்ஷ்டசாலிகளுக்கு பம்பர் பரிசாக ராக்கட் வழங்கப்படும்….

விரைவில் இது போன்ற விளம்பரங்கள் தொலைக்காட்சி,பத்திரிக்கை, பிட் நோட்டீஸ் வடிவில் உங்களை தேடி வந்தால் ஆச்சரியபடக்கூடாது என்பதற்காகவே இந்த முன் அறிவிப்பு கட்டுரை.ஆம் நிலவில் வீட்டு மனை போட்டு விற்க ஆரம்பித்து விட்ட்து லூனார் ரிஜிஸ்ட்ரி என்ற அமெரிக்க நிறுவனம்..எந்த நிலா என்று கேட்காதீர்கள் காலங்காலமாக கால் நீட்டியபடி பாட்டி வடை சுட்டுக்கொண்டிருக்கு அதே நிலாதான்.

Saturday, May 26, 2012

வேலுவின் நீதிக்கதைகள்

கரகாட்டக்காரன் வேலு


ஒரு ஊர்ல திருவிழாவாம், திருவிழாவ பிரம்மாண்டமா பண்றதுக்காக தமிழ்நாட்லையே நம்பர் ஒன் கரகாட்டக்காரன் வேலுவ புக் பண்ணாங்க. திருவிழாவுக்கு முதல் நாளே அவனும் வந்து தயாராக ஆரம்பிச்சிட்டான் ஊர்காரங்களும் அவன நல்லா கவனிச்சிட்டாங்க. திருவிழா அன்னைக்கு மேக் அப்லாம் போட்டுகிட்டு வந்து ரெடியா கோவில் தெருவுக்கு வந்துட்டான். கொஞ்ச நேரம் கழிச்சி நான் கரகாட்டம் ஆட முடியதுன்னிட்டான் ஏண்டான்னு கேட்டா  தெரு கோணலா இருக்குன்னான்....

நீதி: ஆட தெரியாதவன் மட்டும் அல்ல ஆட தெரிந்தவனும் தெரு கோணலா இருக்குன்னு சொல்லுவான்.

காதலித்தான் வேலு



வேலுவும், சந்தியாவும் லவ்வர்ஸ். ரெண்டு பேரும் 2 வருஷமா கதறி கதறி லவ் பண்ணாங்க. ரெண்டு பேரும் போகாத ஊர் இல்ல சுத்தாத இடமில்ல. ஒரு நாள் வேலுவுக்கு பொறந்த நாள் ரெண்டு பேரும் ஐ நாக்ஸ்ல ஈவ்னிங் பட்த்துக்கு போறத பிளான். சந்தியா என்ன பண்ண சர்ப்ரைஸா இருக்கட்டும்னு காலையிலையே கிப்ட் வாங்கிட்டு வேலு விட்டுக்கு போனா. காலிங் பெல் அடிக்கலாம்னு நினைக்கும் போது உள்ள சந்தியான்னு எதோ குரல் கேட்ட்து சரி நம்மள பத்தி என்ன பேசுறான்னு கேப்போம்னு சந்தியா கதவு பக்கத்துல நின்னா “மச்சான் சந்தியாலம் சும்மா டைம் பாஸ்டா அவள யாராச்சும் லவ் பண்ணுவாங்களா?” அப்டின்னு வேலு யார்கிட்டையோ போன்ல பேசிட்டு இருந்தான் இத கேட்ட சந்தியா வேலு லவ்வ தூக்கி எறிஞ்சிட்டு போயிட்டா

நீதி: காதலுக்கு கண் இல்ல ஆனா காது இருக்கு


பாலைவனத்தில் வேலு


ஒரு நாள் வேலு பாலைவனத்துல மேற்கு பக்கமா நடந்து போயிட்டு இருந்தான். அவனுக்கு செம தாகம் ஆனா ரொம்ப தூரத்துக்கு தண்ணி இருக்குறதுக்கான அறிகுறியே தெரியல. என்ன பண்ணலாம்னு யோசிச்சிட்டே நடந்து போகும் போது ஒரு ஆள் ஒட்டகத்து மேல உக்காந்துகிட்டு கிழக்கு பக்கமா போயிட்டு இருந்தார். அவர்கிட்ட வேலு “அய்யா இங்க பக்கத்துல எங்கையாவது தண்ணி கிடைக்குமான்னு கேட்டான்” அவர் “தெற்கு பக்கமா ஒரு கிலோ மீட்டர் போனா பாலைவன சோலை இருக்கு அங்க தண்ணி கிடைக்கும்” னு சொன்னார். இவனும் இடது பக்கமா திரும்பி நடக்க ஆரம்பிச்சான் ஒரு கிலோ மீட்டர் தள்ளி அவர் சொன்னா மாதிரியே தண்ணி இருந்த்து வேலுவும் குடிச்சி தாகம் தீர்த்துகிட்டான்.


நீதி: மேற்குல இருந்து இடது பக்கம் திரும்பினா தெற்கு …….


டிஸ்கி: இந்த மாதிரி ஐடியாவ ஒரு பிளாக்ல பார்த்தேன் அதே மாதிரி நாமும் முயற்சி பண்ணி பார்க்கலாம்னு கொஞ்சம் வேற மாதிரி ட்ரை பண்ணேன் எப்படி இருக்கு?.........





Thursday, May 24, 2012

ctrl+c ctrl+v

சும்மா அப்போ அப்போ நான் கீச்சின சில கீச்சுகள்ல இருந்து சிலத ctrl+c , ctrl+v பண்ணியிருக்கேன்


1.உபயம்னு கோவிலுக்கு டியுப் லைட்ல பேர் எழுதி தர்றவன கூட மன்னிச்சிடலாம் ஆன குண்டு பல்புல இனிஷியல போட்டு தர்றவன எல்லாம் என்ன பண்றது..


2.தாம்பரம் வந்தா கொஞ்சம் சொல்லுங்கன்னு சொல்லிட்டு சொன்னவன் தூங்கிடுவான் அவனுக்காக நாம முழிச்சிட்டே வர வேண்டியிருக்கும்


3,.பேஷன்ட் கோமவுல இருந்து திரும்ப ஒரே வழி திரும்ப திரும்ப அவங்கள கூப்பிடுறது தான் #தங்கம் சீரியல்


4."நவின்” ன்னு கூகுள்ல சர்ச் பண்ணா என்னோட பேரு மொத பக்கத்திலையே வருது இந்த ஒரு விஷயத்துக்காவது ட்விட்டர்ல இருக்கலாம்....

Tuesday, May 22, 2012

கல்விப்பண்ணைகள்

ஒரு வழியாய் இந்த வருட பிளஸ் 2 ரிசல்ட் வந்து விட்டது வழக்கம் போல் மாணவிகளே முதல் இடம்,ஏழையாய் மாறி டாக்டருக்கு சேவை செய்வேன் போன்ற செய்திதாள் பழைய மாவுகளை விட்டுவிட்டு பார்த்தால் இன்னுமொரு செய்தி முக்கியத்துவம் பெறுகிறது.

அது நாமக்கல் மாவட்டம் மாநில ரேங்கை தட்டி சென்றிருப்பது, அதுவும் மொத்தமாய் ஆறு இடங்கள் ஒன்றிரண்டு வருடங்களை தவிர பெரும்பாலும் தென் தமிழக குறிப்பாக சேலம்,நாமக்கல்,கோவை,போன்ற பகுதிகளை சேர்ந்த மாணவ,மாணவிகளே அதிகம் மாநில ரேங்க் பெறுகின்றனர்.



சரி நல்ல விஷயம் தானேன்னு பார்த்தா

Tuesday, January 31, 2012

கஸல் கவித


(டிஸ்கி: இதையெல்லாம் கவிதைன்னு உனக்கு யார் சொன்னது அப்படின்னு நீங்க கேட்கலாம், கேட்கலைன்னாலும் அதான் உண்மை,வேணும்னா இதையெல்லாம் கவிதை version 1.0னு வச்சிக்கலாம் பியூச்சர் அப்டேட்ல சரி பண்ணிக்கலாம் )


பேருந்தில் என் மீது வீசும்
உனது பார்வைக்கான
அர்த்த புரிதல் இன்றி
தவிக்கிறேன் கண்ணே
சொல்லிவிடு என்னவென்று
டிக்கட் வாங்க பணம் இல்லையா?!


காலை கண் 
விழித்ததும் உறைத்தது
வானிலை நேற்று போல்
இல்லை இன்று
ஒரே பனி மூட்டம்
வசந்தகாலம் முன்னரே
ஆரம்பித்துவிட்டது என
மனம் மகிழ்ச்சி அடைந்த
வேளையில் தான்
மூளையில் உறைத்தது
இது பனி மூட்டம் அல்ல
ஹங் ஓவர் என்று......!

Wednesday, January 18, 2012

தற்கொலை-கண்ணீர்,காதல்,கலை


முடிவு செய்துவிட்டேன் தற்கொலை செய்துக்கொள்வது என்று ஆம் நிஜமாகவே நான் தற்கொலை செய்துக்கொள்ள போகிறேன். தற்கொலை கோழைத்தனம் என்றெல்லாம் எனக்கு உபதேசம் செய்ய வேண்டாம். எனது கதையை கேட்டால் நீங்கள் கூட தற்கொலை செய்துகொள்வீர்கள். அப்படி என்ன சோக கதை சொல்லுங்கள் கேட்கிறோம் என்று நீங்கள் நினைப்பது எனக்கு தெரிகிறது சொல்கிறேன் கேளுங்கள்... இல்லை வேண்டாம் எனது கதையை சொல்லி உங்களையும் சாகடிக்க நான் விரும்பவில்லை.

இந்த காலத்தில் வேலை இல்லாமல் இருப்பதை விட கொடுமையானது, மூவாயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை பார்ப்பது, அதையும் விட கொடுமை அந்த வேலை சில முட்டாள் காரணங்களுக்காக பறிபோவது. அப்படி வேலை பறிபோகும் அளவிற்கு என்ன நடந்தது என்றால், அன்று வேலை முடித்து வீடு திரும்ப போகும் நேரத்தில்... இல்லை வேண்டாம் ஏற்கனவே நீங்கள் நான் தற்கொலை செய்துக்கொள்ள் போவதை எண்ணி சோகத்தில் இருக்கீறிர்கள் உங்களை மேலும் சோகத்தில் ஆழ்த்த நான் விரும்பவில்லை.