Thursday, May 24, 2012

ctrl+c ctrl+v

சும்மா அப்போ அப்போ நான் கீச்சின சில கீச்சுகள்ல இருந்து சிலத ctrl+c , ctrl+v பண்ணியிருக்கேன்


1.உபயம்னு கோவிலுக்கு டியுப் லைட்ல பேர் எழுதி தர்றவன கூட மன்னிச்சிடலாம் ஆன குண்டு பல்புல இனிஷியல போட்டு தர்றவன எல்லாம் என்ன பண்றது..


2.தாம்பரம் வந்தா கொஞ்சம் சொல்லுங்கன்னு சொல்லிட்டு சொன்னவன் தூங்கிடுவான் அவனுக்காக நாம முழிச்சிட்டே வர வேண்டியிருக்கும்


3,.பேஷன்ட் கோமவுல இருந்து திரும்ப ஒரே வழி திரும்ப திரும்ப அவங்கள கூப்பிடுறது தான் #தங்கம் சீரியல்


4."நவின்” ன்னு கூகுள்ல சர்ச் பண்ணா என்னோட பேரு மொத பக்கத்திலையே வருது இந்த ஒரு விஷயத்துக்காவது ட்விட்டர்ல இருக்கலாம்....



5.இன்னைக்கு சரக்கடிக்க வாய்ப்பு இருந்தும் நான் தவிர்த்துட்டேன் ......30 நாளில் திருந்துவது எப்படி புக் எதும் இருக்கா? இல்ல எழுதட்டுமா?.


6.பாய்ஸ் படம் வரும்போது பீர் விலை 60 ரூபாயாம் 8 வருஷத்துல வெறும் 10 ரூபா தான் விலை ஏறி இருக்கு சோ தண்ணி அடிக்கிறவன தவிர மத்தவன் எல்லாம் தான் விலைவாசி உயர்வுக்கு காரணமாகி இருக்கான்...நல்லவன்டா நாம..


7.சிவராஜ் வைத்திய சாலை பரம்பரையில் எப்படி வரிசையா ஆம்பள பசங்களா பொறக்குறாங்கன்னு கண்டுபிடிக்க விசாரனை குழு அமைக்கனும் மொதல்ல..


8.சென்னைக்கு மிக அருகில் தின்டிவனமும் சென்னைக்கு மிக மிக அருகில் அரக்கோணமும் இருப்பது ரியல் எஸ்டேட் ஆட்கள் சொல்லித்தான் நமக்கு தெரிகிறது


9.பஸ்ஸுல பத்து மணி நேரம் கூட உக்காந்துட்டு வருவானுங்க பஸ் நின்னதும் கீழ இறங்க பத்து செகன்ட் பொறுக்க மாட்டானுங்க திபுதிபுதிபுன்னு ஒடுறானுங்க


10.கேரளா மக்களுக்கு ஒன்றை மட்டும் கூற விரும்புகிறேன் உங்கள் ஊரில் பிட்டு படத்தில் மட்டுமே நடித்த ஷகிலாவை கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக மாற்றி கலாசாரத்தை காப்பாற்றியவர்கள் நாங்கள் தான்


11.எல்லா கதையிலும் மெயின் வில்லன தான் ஹீரோ திருத்துறார் மீதி பேர எல்லாம் சாகடிச்சிடுறார் அவங்களையும் கொஞ்ச்ம திருத்த கூடாதா?...


12.அம்மாவுக்கு நன்றிகலந்த உணர்வுகளை பணிவுடன் சமர்ப்பிக்கும்பேரணி#இதுவே கலிஞர் ஆட்சின்னா கோட்டையை நோக்கி ஆர்ப்பாட்டம்னு இருக்கும்


13. பல்லவனின்,வீரப்பனின்,போதி தர்மனின் வழி தோன்றலே..,.#மவுன்ட் பேட்டன் பிரபுவாவது வேற ஜாதியா இல்ல அவனும் நம்ம ஜாதியா?

No comments: