Posts

Showing posts with the label மொக்கை

குளிர்பெட்டி

என்னைக்காவது குளிர்சாதனப்பெட்டிக்குள்ள (இதுக்கப்புறம் இந்தக்கதைல இத குளிர்பெட்டின்னு சொல்லிக்குவோம்) எட்டி பாத்திருக்கிங்களா?, ம்ம் பாத்திருக்கேனேன்னு சொல்லக்கூடாது. நான் கேக்குறது குளிர்பெட்டி சாத்தி  இருக்கும்போது பார்த்திருக்கிங்களான்னு. சாத்தி இருக்கும்போது எப்படி பாக்க முடியும்னு கேக்க கூடாது. அங்க தான் விசயம் இருக்கு உள்ளுக்குள்ள இருக்க காய்கறி , சாக்லேட்லாம் ஒண்ணோட ஒண்ணு பேசிக்கிட்ருக்கு. இல்ல வித்தியாசமா பாக்காதீங்க. லூசு இல்ல. உண்மையாத்தான் சொல்றேன். நான் ஒரு தரம் கூட பார்த்ததில்லையேன்னு யோசிக்காதீங்க. நானும் பார்த்ததில்ல என்ன நடக்குதுன்னா நாம குளிர்பெட்டியோட கதவ திறக்கும்போதோ இல்ல அப்படி யோசிச்ச உடனேயோ அதுங்கள்லாம் நாம எப்படி பாக்குறோமோ அப்படி ஆகிடுதுங்க. இப்போ அடுத்த கேள்வி உனக்கெப்படி தெரியும்?. சொல்றேன் நான் ஒரு நாள் கத்திரிக்காய் வேடம் போட்டுட்ருந்தேன். இது கதைங்குறதால ஏன் கத்திரிக்காய் வேடம் போட்டேன்னுலாம் சொல்லுவேன்னு எதிர்பார்க்ககூடாது. எங்கம்மா சமையக்கட்டுல இருந்து இன்னும் குளிர்பெட்டிக்குள்ள வைக்காதது அரிசி மூட்டைய மட்டுந்தான். அப்படி ஒரு ஆள் சும்மாருப்பா...

வேலுவின் நீதிக்கதைகள் -2

Image
வேலுவின் நீதிக்கதைகள் பற்றி அறியாதவர்களுக்கு வேலுவின் நீதிக்கதைகள் -1 வேலுவே எழுதிய நீதிக்கதை : ஒரு காட்டுல ஒரு பாட்டி வடை சுட்டு வித்துட்டு இருந்தாளாம். காட்டு மிருகமெல்லாம் அங்க வந்து வடை வாங்கி சாப்பிட்டு போகுமாம்.அந்த காட்டுல ஒரு காக்காவும் இருந்துச்சாம். அதுக்கு வடை சாப்பிடனும்னு ரொம்ப நாள் ஆசையாம். ஆனா பாவம் அது கிட்ட வடை வாங்க காசே இல்லையாம். என்ன பண்ணலாம்னு சோகமா யோசிச்சிட்டு இருக்கும் போது ஆமை வந்து என்ன பிரச்சனை ஏன் சோகமா இருக்கேன்னு கேட்டுச்சாம். காக்காவும் வடைய பத்தி சொல்லுச்சாம். ஆமை, நீ பாட்டி அசந்த நேரம் பார்த்து வடைய தூக்கிட்டு வந்துடுன்னுச்சாம். ரெண்டு நாள் கழிச்சி ஆமை வந்துச்சாம் என்ன ஆச்சு வடையை தூக்கிட்டியான்னு கேட்டுச்சாம். அட நீ வேற விடப்பான்னுச்சாம். ஏம்ப்பா என்ன ஆச்சுன்னுச்சாம் ஆமை. நான் வடைய தூக்க போகும் போதெல்லாம் மாட்டிக்கிறேன் எனக்கு லாங்க் சைட் வேறையா கிட்ட போகும் போது எது வடை சட்டி எது எண்ணெய் சட்டின்னே தெரிய மாட்டேங்குது. ஒண்ணு பாட்டிக்கிட்ட மாட்டிக்கிறேன் இல்லைன்னா எண்ணெய் சட்டில சூடு வச்சிக்கிறேன் அப்படின்னுச்சாம் காக்கா. சரி ஒ...

தூங்குதலின் குறிப்புகள்....

Image
குப்புறபடுத்தலின் குறிப்புகள்.... மல்லாkக படுத்து யோசிப்பதை விட குப்புற படுத்து யோசித்தால் சிந்தனை எளிதில் வசப்படும் மல்லாக்க படுப்பதென்பது மனிதனுக்கு மட்டுமே உரியது என்பதால் இயற்கையோடு இணைய குப்புறபடுப்பதே சிறந்ததென்பது என் எண்ணம்.. தொப்பை கரைய குப்புறபடுக்கலாம் என்பது புத்திசாலி சோம்பேறிகளின் உடற்பயிற்சி சிந்தனைகளில் ஒன்று... இரவில் தூங்கும்போது நமக்குச் சிறகு முளைத்தால் குப்புறபடுத்தவன் அப்படியே பறந்துவிடலாம் மல்லாக்கப்படுத்தவன் புரண்டு பறக்க வேண்டும்.. குழந்தையாய் இருக்கும்போது தானே புரண்டு குப்புறப்படுப்பதே நாம் தவழ,நடக்க எடுக்கும் முதல் முயற்சி.... எதிர்காலத்தில் நின்றுகொண்டே தூங்குமாறு பரிணாம குழப்பம் ஏற்படலாம் என்றால் இப்போதே குப்புறபடுத்தி பழக்கபடுத்தி கொள்ளுதலே நல்லது மின்சாரம் இல்லாத நேரத்தில் மல்லாக்க படுத்து ஓடாத மின் விசிறியை பார்த்து ஆட்கொணா துயரில் ஆழ்வதற்கு குப்புறபடுத்தலே மேல்.. மல்லாக்கப்படுத்தலின் குறிப்புகள்.... மல்லாக்கப் படுத்தல் மனித இனத்திற்கு மட்டுமே உரிய பகுத்தறிவு குணங்களில் ஒன்று... மல்லாக்கப் படுத்து கொஞ்ச நேரமே ஓடும் மின் விசி...

வேலுவின் நீதிக்கதைகள்

Image
கரகாட்டக்காரன் வேலு ஒரு ஊர்ல திருவிழாவாம், திருவிழாவ பிரம்மாண்டமா பண்றதுக்காக தமிழ்நாட்லையே நம்பர் ஒன் கரகாட்டக்காரன் வேலுவ புக் பண்ணாங்க. திருவிழாவுக்கு மு தல் நாளே அவனும் வந்து தயாராக ஆரம்பிச்சிட்டான் ஊர்காரங்களும் அவன நல்லா கவனிச்சிட்டாங்க. திருவிழா அன்னைக்கு மேக் அப்லாம் போட்டுகிட்டு வந்து ரெடியா கோவில் தெருவுக்கு வந்துட்டான். கொஞ்ச நேரம் கழிச்சி நான் கரகாட்டம் ஆட முடியதுன்னிட்டான் ஏண்டான்னு கேட்டா   தெரு கோணலா இருக்குன்னான்.... நீதி: ஆட தெரியாதவன் மட்டும் அல்ல ஆட தெரிந்தவனும் தெரு கோணலா இருக்குன்னு சொல்லுவான். காதலித்தான் வேலு வேலுவும், சந்தியாவும் லவ்வர்ஸ். ரெண்டு பேரும் 2 வருஷமா கதறி கதறி லவ் பண்ணாங்க. ரெண்டு பேரும் போகாத ஊர் இல்ல சுத்தாத இடமில்ல. ஒரு நாள் வேலுவுக்கு பொறந்த நாள் ரெண்டு பேரும் ஐ நாக்ஸ்ல ஈவ்னிங் பட்த்துக்கு போறத பிளான். சந்தியா என்ன பண்ண சர்ப்ரைஸா இருக்கட்டும்னு காலையிலையே கிப்ட் வாங்கிட்டு வேலு விட்டுக்கு போனா. காலிங் பெல் அடிக்கலாம்னு நினைக்கும் போது உள்ள சந்தியான்னு எதோ குரல் கேட்ட்து சரி நம்மள பத்தி என்ன பேசுறான்னு கேப்போம்னு சந்...

ctrl+c ctrl+v

Image
சும்மா அப்போ அப்போ நான் கீச்சின சில கீச்சுகள்ல இருந்து சிலத ctrl+c , ctrl+v பண்ணியிருக்கேன் 1.உபயம்னு கோவிலுக்கு டியுப் லைட்ல பேர் எழுதி தர்றவன கூட மன்னிச்சிடலாம் ஆன குண்டு பல்புல இனிஷியல போட்டு தர்றவன எல்லாம் என்ன பண்றது.. 2.தாம்பரம் வந்தா கொஞ்சம் சொல்லுங்கன்னு சொல்லிட்டு சொன்னவன் தூங்கிடுவான் அவனுக்காக நாம முழிச்சிட்டே வர வேண்டியிருக்கும் 3,.பேஷன்ட் கோமவுல இருந்து திரும்ப ஒரே வழி திரும்ப திரும்ப அவங்கள கூப்பிடுறது தான் #தங்கம் சீரியல் 4."நவின்” ன்னு கூகுள்ல சர்ச் பண்ணா என்னோட பேரு மொத பக்கத்திலையே வருது இந்த ஒரு விஷயத்துக்காவது ட்விட்டர்ல இருக்கலாம்....