Tuesday, January 31, 2012

கஸல் கவித


(டிஸ்கி: இதையெல்லாம் கவிதைன்னு உனக்கு யார் சொன்னது அப்படின்னு நீங்க கேட்கலாம், கேட்கலைன்னாலும் அதான் உண்மை,வேணும்னா இதையெல்லாம் கவிதை version 1.0னு வச்சிக்கலாம் பியூச்சர் அப்டேட்ல சரி பண்ணிக்கலாம் )


பேருந்தில் என் மீது வீசும்
உனது பார்வைக்கான
அர்த்த புரிதல் இன்றி
தவிக்கிறேன் கண்ணே
சொல்லிவிடு என்னவென்று
டிக்கட் வாங்க பணம் இல்லையா?!


காலை கண் 
விழித்ததும் உறைத்தது
வானிலை நேற்று போல்
இல்லை இன்று
ஒரே பனி மூட்டம்
வசந்தகாலம் முன்னரே
ஆரம்பித்துவிட்டது என
மனம் மகிழ்ச்சி அடைந்த
வேளையில் தான்
மூளையில் உறைத்தது
இது பனி மூட்டம் அல்ல
ஹங் ஓவர் என்று......!

Wednesday, January 18, 2012

தற்கொலை-கண்ணீர்,காதல்,கலை


முடிவு செய்துவிட்டேன் தற்கொலை செய்துக்கொள்வது என்று ஆம் நிஜமாகவே நான் தற்கொலை செய்துக்கொள்ள போகிறேன். தற்கொலை கோழைத்தனம் என்றெல்லாம் எனக்கு உபதேசம் செய்ய வேண்டாம். எனது கதையை கேட்டால் நீங்கள் கூட தற்கொலை செய்துகொள்வீர்கள். அப்படி என்ன சோக கதை சொல்லுங்கள் கேட்கிறோம் என்று நீங்கள் நினைப்பது எனக்கு தெரிகிறது சொல்கிறேன் கேளுங்கள்... இல்லை வேண்டாம் எனது கதையை சொல்லி உங்களையும் சாகடிக்க நான் விரும்பவில்லை.

இந்த காலத்தில் வேலை இல்லாமல் இருப்பதை விட கொடுமையானது, மூவாயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை பார்ப்பது, அதையும் விட கொடுமை அந்த வேலை சில முட்டாள் காரணங்களுக்காக பறிபோவது. அப்படி வேலை பறிபோகும் அளவிற்கு என்ன நடந்தது என்றால், அன்று வேலை முடித்து வீடு திரும்ப போகும் நேரத்தில்... இல்லை வேண்டாம் ஏற்கனவே நீங்கள் நான் தற்கொலை செய்துக்கொள்ள் போவதை எண்ணி சோகத்தில் இருக்கீறிர்கள் உங்களை மேலும் சோகத்தில் ஆழ்த்த நான் விரும்பவில்லை.