Monday, September 26, 2011

1100


(டிஸ்கி 1:இது என்னோட மொத கதை கொஞ்சம் அப்படி இப்படி தான் இருக்கும் தலைவலி மாத்திரை போட்டுகிட்டாவது படிச்சி முடிச்சிடுங்க )
(டிஸ்கி 2:எங்கேயும் எப்போதும் விமர்சன்ம 130பேர் படிச்சதா கவுன்டர் காமிக்கிது ஆனா 13 comment தான் இருக்கு ஒரு கமென்ட் போட்டா குறைஞ்சா போய்டுவிங்க எப்புடி இருக்குன்னு சொல்லிட்டு போங்கப்பா ) 

செல் போனுக்கும் எனக்கும் அப்படியொன்றும் பூர்வஜென்ம பந்தம் எல்லாம் இல்லை.பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது தான் எனது ஆஸ்தான செல்போன் நோக்கியா 1100 அறிமுகம் கிடைத்தது.

ஒரு நாள் கணக்கு வகுப்பில் பக்கத்தில் இருந்த பெண்ணை சீண்டிவிட்டு விட அவள் ஏற்கனவே ரெகார்ட் நோட் முடிக்காமல் இருக்க அதில் இருந்து தப்பிக்க இவன் தான் சரியான ஆள் என்று கணக்கு டீச்சரிடம் போட்டு கொடுத்தாள் அந்த டீச்சர் ஏற்கனவே அவர்களிடம் நான் டியூஷன் படிக்காமல் இருந்த கோபத்தோடு இதையும் சேர்த்து என்னை வெளிநடப்பு செய்யவச்சாங்க


எனக்கு வேறு புகலிடம் கிடைக்காதால் வேறு வழியின்றி வீட்டிற்கே சென்று தஞ்சம் அடைந்தேன் வீட்டில் அம்மா சந்தேக கண்ணோடு பார்த்தாங்க. தினமும் பள்ளிக்கூடம் முடிந்து ஒரு மணி நேரம் அதிகமா படிச்சிட்டு தானே வரும் புள்ள (வீக் ஸ்டுடன்ட் கிளஸ் ) இன்னைக்கு என்ன சீக்கிரம் வந்துடிச்சின்னு நினைச்சி என்னப்பா தம்பி சீக்கிரம் வந்துட்டான்னு கேக்க என்னத்த சொல்றது தெரியாம முழிக்க “எனக்கு செல் போன் வாங்கி குடுத்தா தான் ஸ்கூலுக்கு போவேன் எல்லா பசங்களும் வச்சிருக்காங்க என்கிட்டே மட்டும் இல்லைன்னுசம்பந்தம் இல்லாம பேச எங்கம்மாவுக்கு ஒண்ணுமே புரியலைன்னாலும் அன்னைக்குன்னு பார்த்து ரொம்ப நாளா வராம இருந்த வீட்டு வாடகை வந்ததாலும் என்னோட கருத்துக்கு செகன்ட் ஒபினியன் கேக்க ஆள் இல்லைங்கறதாலும் இந்தா ஒழிஞ்சி தொலை எதாவது பண்ணிக்கோ என்று ஒரு இரண்டாயிரம் பணமும் சில பல திட்டுகளும் கைக்கு வந்தது.

Monday, September 19, 2011

எங்கேயும் எப்போதும் -ஃபிகர்களின் அணி வரிசை


(ஒண்ணே ஒண்ணு சொல்லிக்கிறேன் வந்தவங்க கமென்ட் போட்டுட்டு போங்க யார் யார் வர்ரிங்கன்னே எத்தனை பேர் வர்ரிங்கன்னே தெரியமாட்டேங்குது குறைந்தபட்சம் நான் வந்தேன்னு உங்க பேராவது போட்டுட்டு போங்க )

எங்கேயும் எப்போதும் காதல் வரலாம், எங்கேயும் எப்போதும் விபத்துக்கள் நேரலாம் இது தான் படப்பெயர் காரணம் .....படத்தை பார்க்கும் போது படம் பார்க்கும் உணர்வே தோன்ற கூடதுன்னு நினைப்பவரா நீங்க உங்களுக்கு தான் இந்த படமே ...

படம் ஆரம்பிக்கும் போது ஒரு SETC பஸ் ஒரு தனியார் ஆம்னி பஸ் ரெண்டும் நேருக்கு நேர் மோதிக்கொள்கிறது அங்க இருந்து தான் படம் ஆரம்பிக்குது SETC பஸ்ஸில் ஜெய் ,அஞ்சலி,சரவ் திருச்சியில் இருந்து வர்றாங்க தனியார் பஸ்ல அனன்யா வர்றாங்க இப்போ தான் பிளாஷ் பேக்