Wednesday, August 31, 2011

மங்காத்தா இரண்டாவது பில்லாவா -விமர்சனம்

அஜித் அம்பதாவது படம் என்று பெரும் எதிர்பார்ப்பிலும்(அப்படி தான் சொன்னாங்க ) பெரும் பிரச்சனைகளிலும் வந்திருக்கும் படம் ...

அம்பதாவது படத்தில் சோலோவாக நடிக்காமல் கும்பலோடு நடித்த மனமுதிர்சிக்காக அஜித்தை பாராட்டலாம் .படத்தில் சற்று வயதான  போலிஸ் அதிகாரியாக  வருகிறார் அஜித் (தொப்பைக்கு காரணம் சொல்லியாச்சி அப்புறம் என்னடா ஹீரோ தொப்பயோட வரார்னு கேக்க கூடாது).கதை என்னவென்றால் ஐபிஎல் ஆட்டத்தில் சூதாட்ட பணம் ஜெயபிரகாஷ் மூலம் 500 கோடி கைமாற இருக்கிறது அதை அவரிடம் வேலை பார்க்கும் வைபவ் தனது முன்று நண்பர்களுடன் சேர்ந்து கொள்ளை அடிக்க முயற்சிக்க அவர்களுடன் இணைகிறார் அஜித்.பணத்தையும் கொள்ளை அடித்து விட அந்த பணத்தை ஐந்து பேரில் இரண்டு பேர் மட்டும் ஏமாற்றி எடுத்து சென்று விடுகின்றனர் இதனால் அஜீத் கடுப்பாகி செய்யும் வேலைகளே மீதி கதை


.படத்தில் எத்தனை கேரக்டர் என்று எண்ணுவதற்கே தனி போட்டி வைக்கலாம் அவர்கள் அத்தனை பேரையும் அறிமுக படுத்தவே 45 நிமிடம் காலி அதற்கு பிறகே கதை சூடு பிடிக்கிறது.திரிஷா,அஞ்சலி ,லட்சுமிராய் என்று மூன்று கதாநாயகிகள் இதில் திரிஷா அஜித்துக்கு ஜோடி (டேய் இதெல்லாம் சொன்னாதான் தெரியுமாடா ) ரெண்டு பாட்டுக்கு வந்து போகிறார் அத்தனை பேர் இருக்கும் படத்தில் திரிஷாவை தனியே பார்க்க முடியவில்லை அவருக்கு எத்தனை வயது என்று சொல்லவில்லை இருந்தும் தமிழ் பட விதிப்படி வயதான அஜித்தை காதலிக்கிறார்.அஞ்சலி ஒரே பாட்டுக்கே வருகிறார் அதிலேயே அவர் காண்பிக்க வேண்டியதை காண்பித்து விடுவதால்  அதுக்கு அப்புறம் காணோம் மூணாவதா லட்சுமிராய் பில்லா படத்தில எப்படி நமீதாவோ அதே மாதிரி இந்த படத்தில் இவங்க வாங்குன காசுக்கு வஞ்சனை இல்லாம நடிச்சி இருக்காங்க

மூணு ஹீரோயின் என்பதால் கவர்ச்சி பகுதி ஓகே .அடுத்து நகைச்சுவை பிரேம்ஜி சில நேரம் சிரிக்க வைக்கிறார் சில நேரம் கடுப்பை கிளப்புறார் அஜீத் அவருடன் சேர்ந்து செய்யும் காமெடி எடுபட்டிருக்கிறது.சண்டை காட்சிகள் அர்ஜுன் உடன் இருப்பதாலும் கேமரா தூள் பண்ணி இருப்பதாலும் அமர்க்களமாய் உள்ளது.யுவன் இசை இதில் நன்றாக பொருந்தியுள்ளது அஜித்துக்கு பாடல்களில் அவர் நடனம் ஆடும் அளவிற்கு ஏற்பவே இசை உள்ளது(நீங்க நடந்து வர்றது நல்லா தான் இருக்கு அதுக்காக டுயட் சாங்ல கூடவா நடந்து வர்றது ).

மொத்தத்தில் இரண்டாவது பில்லாவா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும் அதில் அஜீத் தனியே தான் திறமையை காட்டி இருப்பார் இதில் பல பேர் கும்பல்.திரைக்கதை சில நேரங்களில் இழுத்து கொண்டு போகிறது அதுவும் அந்த இடை வேலைக்கு முன்னர் வரும் காட்சி தேவை இல்லாத நீளம் . இருந்தும் அஜீத் ரசிகர்களுக்கு நல்ல விருந்து இந்த படம்

எதிர்பார்க்கபடும்
விகடன் மார்க் -43
குமுதம் -ஓகே
சிபி -அஜீத் ரசிகன் தாரளமாக பார்க்கலாம்
சாரு -அவ்வ்வ்வ்வ்
நவீன் -மொத பாதி கொஞ்சம் இழுவை கொஞ்சம் ஸ்பீட் ரெண்டாவது பாதியும் அதே தான்

8 comments:

saisowmeya@gmail.com said...

சுறாவுக்கு இது ஆயிரம் மடங்கு மேல்.....

Unknown said...

அர்ஜுனை பற்றி ஒரு வார்த்தை கூட விமர்சனத்தில் இல்லையே

sailu said...

சுறாவுக்கு இது ஆயிரம் மடங்கு மேல்.....

நவின் குமார் said...

//அர்ஜுன் உடன் இருப்பதாலும்// போட்டுஇருக்கேனே உடன் பிறப்பே இருக்குற அத்தனை பேரையும் எப்படி போடுறது பக்கம் பாத்ததே

N.H. Narasimma Prasad said...

Ajith Always Rocks. Thala Pola Varuma?

சி.பி.செந்தில்குமார் said...

>>மொத்தத்தில் இரண்டாவது பில்லாவா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும் அதில் அஜீத் தனியே தான் திறமையை காட்டி இருப்பார் இதில் பல பேர் கும்பல்.திரைக்கதை சில நேரங்களில் இழுத்து கொண்டு போகிறது

அழகிய அவதானிப்பு

vivek said...

hey It is much much better than Vijay Films....Try to appreciate other actors films also if it is good......

Shavetharan said...

TaLapathy is the king of king,nobody is here to break him out.