Monday, September 26, 2011

1100


(டிஸ்கி 1:இது என்னோட மொத கதை கொஞ்சம் அப்படி இப்படி தான் இருக்கும் தலைவலி மாத்திரை போட்டுகிட்டாவது படிச்சி முடிச்சிடுங்க )
(டிஸ்கி 2:எங்கேயும் எப்போதும் விமர்சன்ம 130பேர் படிச்சதா கவுன்டர் காமிக்கிது ஆனா 13 comment தான் இருக்கு ஒரு கமென்ட் போட்டா குறைஞ்சா போய்டுவிங்க எப்புடி இருக்குன்னு சொல்லிட்டு போங்கப்பா ) 

செல் போனுக்கும் எனக்கும் அப்படியொன்றும் பூர்வஜென்ம பந்தம் எல்லாம் இல்லை.பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது தான் எனது ஆஸ்தான செல்போன் நோக்கியா 1100 அறிமுகம் கிடைத்தது.

ஒரு நாள் கணக்கு வகுப்பில் பக்கத்தில் இருந்த பெண்ணை சீண்டிவிட்டு விட அவள் ஏற்கனவே ரெகார்ட் நோட் முடிக்காமல் இருக்க அதில் இருந்து தப்பிக்க இவன் தான் சரியான ஆள் என்று கணக்கு டீச்சரிடம் போட்டு கொடுத்தாள் அந்த டீச்சர் ஏற்கனவே அவர்களிடம் நான் டியூஷன் படிக்காமல் இருந்த கோபத்தோடு இதையும் சேர்த்து என்னை வெளிநடப்பு செய்யவச்சாங்க


எனக்கு வேறு புகலிடம் கிடைக்காதால் வேறு வழியின்றி வீட்டிற்கே சென்று தஞ்சம் அடைந்தேன் வீட்டில் அம்மா சந்தேக கண்ணோடு பார்த்தாங்க. தினமும் பள்ளிக்கூடம் முடிந்து ஒரு மணி நேரம் அதிகமா படிச்சிட்டு தானே வரும் புள்ள (வீக் ஸ்டுடன்ட் கிளஸ் ) இன்னைக்கு என்ன சீக்கிரம் வந்துடிச்சின்னு நினைச்சி என்னப்பா தம்பி சீக்கிரம் வந்துட்டான்னு கேக்க என்னத்த சொல்றது தெரியாம முழிக்க “எனக்கு செல் போன் வாங்கி குடுத்தா தான் ஸ்கூலுக்கு போவேன் எல்லா பசங்களும் வச்சிருக்காங்க என்கிட்டே மட்டும் இல்லைன்னுசம்பந்தம் இல்லாம பேச எங்கம்மாவுக்கு ஒண்ணுமே புரியலைன்னாலும் அன்னைக்குன்னு பார்த்து ரொம்ப நாளா வராம இருந்த வீட்டு வாடகை வந்ததாலும் என்னோட கருத்துக்கு செகன்ட் ஒபினியன் கேக்க ஆள் இல்லைங்கறதாலும் இந்தா ஒழிஞ்சி தொலை எதாவது பண்ணிக்கோ என்று ஒரு இரண்டாயிரம் பணமும் சில பல திட்டுகளும் கைக்கு வந்தது.



கையில காசு வந்ததில் மகிழ்ச்சியும் கூடவே சோகமும் சேர்ந்துகொண்டது ஏன்னா அப்போ செல்போன் வித்த விலைக்கு இரண்டாயிரத்தில் பேட்டரியும்,சார்ஜரும் தான் வாங்க முடியும் செல்போனெல்லாம் வாங்க முடியாது என்னடா பண்ணலாம்னு நைட்டு ஃபுல்லா உழலை ஒழிக்க ஹசாரே பிளான் பண்ணினா மாதிரி பிளான் பண்ணும்போது தான் ஒரு யோசனை தோணிச்சு ஒரு செகண்ட் ஹாண்ட் செல்போன் வாங்குறதுன்னு.


எங்க ஊர்ல எனக்கு தெரிஞ்சி ட்ராக்டர் டயருல செருப்பு தச்சி போடுற ஒரு பெரிய மனுசன் இருந்தான் அவன் கிட்ட ட்விட்டர் ,மூஞ்சி புக்ல எப்படி எல்லார் கிட்டயும் வேலை வாங்கி கொடு ,வேலை வாங்கி கொடுன்னு நச்சரிக்கிறானோ அப்படி எனக்கு ஒரு பழைய செல்போன் வாங்கி கொடு வாங்கி கொடு கொடுன்னு அவனை நச்சரிக்க அதன் பலனாய் அவனிடம் இருந்த இரண்டு செல் பொனில் ஒன்று 1800+ஒரு பீரின் சன்மானத்தோடு எனது கைக்கு வந்து சேர்ந்தது இவ்வாறாக அவன் இரண்டாவது செல் போன்  என் முதல் செல் போன் ஆனது அந்த முதல் நாள் இரவு நான் தூங்கவில்லை செல்போனில் மொத்தமாக இருந்த எட்டு வசதிகளும் என்னால் நோண்டி தீர்க்கப்பட்டது.


அடுத்த நாள் காலை அதற்கு லேமினேஷன் ,கவர்,டேக் ஓட்டையில் கீ செயின் என்று மணபெண்ணுக்கு மேக்கப் போடும் கணக்காய் செல் போன் என்னால் அழகு படுத்தப்பட்டது மஞ்சளும்,குங்குமமும் வைத்து அம்மாவால் பூஜை செய்யப்பட்டது.


பின் வரும் நாட்களில் நான் எங்கே சென்றாலும் எடுத்து செல்லும் இன்னபிற அத்தியாவசிய பொருட்களுடன் எனது 1100 சேர்ந்து கொண்டது அதுவும் பாக்கட்டில் வைத்தெல்லாம் எடுத்து செல்ல மாட்டேன் கையில் தான் வைத்திருப்பேன் பின்ன நான் செல் போன் வச்சிருக்குறது நாலு பேருக்கு தெரிய வேண்டாமா??.


இப்படியாக எனது செல்போன்  ஷகிலா படம் கணக்காய் விளம்பரமே இல்லாமல் பேச்சு வாக்கில் பிரபலமாக தொடங்கியது கர்ணணுக்கு எப்படி கவச குண்டலமோ,சோனியாகாந்திக்கு எப்படி மன்னுமோகனோ அப்படி நவினுக்கு செல்போன் என்று ஊர் பேசிக்கொண்டது


இப்படி பெருமைக்குரிய சாதனமாக மட்டும் இல்லாமல் பல உதவிகளும் செய்தது செல்போன் “மச்சி தேவி பாருக்கா போற??” நண்பனின் குரல் செல்லில் “ஆமாண்டா ஏண்டா நீ வரலியா??” என்றேன் “டேய் அங்க அந்த கடன்காரன் (அதாவது கடன் கொடுத்தவன்) இருக்கான் நீ உதயம் பாருக்கு வந்துடு என்ரு ஒரு நாள் என் உயிரையே காப்பாற்றியது.அதில் உள்ள டார்ச் பல கொடிய காட்டு  விலங்குகளான தவளை ,ஓணான்,பாம்பு  போன்வற்றிடம் இருந்து இரவில் காப்பாற்றியது இவ்வாறெல்லாம் செய்தும் என் செல் போன் மேல் எனக்கு கோபம் உண்டு ஒரு தடவை கூட எந்த பெண்ணும் எனக்கு போன் செய்து “ஹலோ நான் ராங் கால் பேசறேன்” என்று சொன்னதில்லை விடுங்க நம்ம அதிர்ஷ்டம் அவ்ளோ தான்.

ஒரு நாள் நண்பன் ஒருவன் சோகமாக இருந்தான் என்னடா ஆச்சி என்றேன் இல்லடா ரெண்டு நாள் முன்னாடி புது செல்போன் வாங்கினேன் கீழ விழுந்து டிஸ்ப்ளே ,பேனல் எல்லாம் தூள் தூளா போச்சு என்றான் சரி விடு மச்சி நடந்தது நடந்து போச்சு ஆமா அந்த செத்து போன செல் போனுக்கு காரியம் எல்லாம் நல்ல படியா முடிஞ்சதா ?” என்று நான் கேட்க அவன் கொலை வெறியுடன் பார்க்க அங்கிருந்து எஸ்கேப்பித்தேன்.


அப்போது தான் எனது நோக்கியா 1100 நியாபகம் வந்தது அது இது வரை
ஒரு பத்து பதினஞ்சி தரம் விழுந்திருக்கும் ரோட்ல கிடந்த அம்பது பைசாவை எடுக்க குனியும்போது,சைக்கிள் ஓட்டும்போது ,அஞ்சி ரூபா குடுக்கலைன்னா கீழ குதிச்சிடுவேன்னு அம்மாவை மிரட்டும் போது இப்படி பல தடவை செல்போன்  கீழ விழுந்து இருக்க நண்பர்களும் எப்புடிடா உன்னோட செல் போன் மட்டும் கிழ விழுந்தும் ஒன்னுமே ஆகாம இருக்கு என்று சொல்லும்போது காதலியின் அம்மாவிடம் பாராட்டு வாங்கிய காதலன் போல  பெருமையாய்  இருக்கும்.


ஒரே ஒரு தரம் மட்டும் கீழ விழுந்து ஸ்பீக்கர் போயிடிச்சி அதுவும் செல்போன் கீழ விழுந்து ஸ்பீக்கர் போனதால என்னால் 108க்கு போன் பண்ணி ஆம்புலன்ஸ் வர வைக்க முடியல இல்லைன்னா எவ்ளோ செலவு ஆனாலும் பரவாயில்லைன்னு ஸ்பீக்கர் உயிரை காப்பத்தி இருப்பேன்.


ஆசை அறுவது நாள் மோகம் முப்பது நாள் என்கிற மாதிரி இப்போதெல்லாம் எனது 1100வை அவ்வளவாக கவனிப்பது இல்லை. நீங்க யாரும் திப்பு சுல்தான் பீரங்கி பார்த்திருக்கிங்களா ?ஒரு பெரிய ஊதாங்கோலுக்கு ரெண்டு டயர் வச்சி இதான் பீரங்கின்னு சொல்லுவாங்க அதே மாதிரி எனது செல் போனும் இன்றைய நிலைமயில் சில பல பட்டன்களும் ஒரு உடைந்து போன பேனலும் எனது செல்லை பாரம்பரிய சின்னமாக அறிவித்து வருகின்றன இப்போது நான் GFIVE,NKTEL போன்ற விலையுயர்ந்த கொரியன் மொபைல் வைத்துருந்தாலும் 1100 மட்டுமே முதன்மையாக பயன்படுத்தி வருகிறேன் அதை விட்டு பிரிய மனசேயில்லை ஆனாலும் அப்படி ஒரு சோக சம்பவம் நடந்துவிட்டது

அன்று மொட்டை மாடியில் நின்று கொண்டு ரோட்டை வேடிக்கை பார்த்து கொண்டுருந்தேன் அப்போது தான் அவன் ரோட்டின் மூலையில் தோன்றினான் அவன் TR போல நகைச்சுவையாக பேசுவான் என்பதாலும், நான் அவனுக்கு சில காகித ரூபாய்கள் தர வேண்டியிருந்ததாலும், ,மறைந்துகொள்ள கிழே குனிந்தேன் அப்போது தான் எனது ஆருயிர் காதல் செல்போன் கிழே விழுந்து விட்டது. அவன் போகும் வரை மறைந்து இருந்து கீழே சென்று பார்த்த போது சென்னை பெண் வரைந்த கோலம போல் இருந்தது எனது செல்போன் டிஸ்ப்ளே வேகமாக கடைக்கு சென்று கொடுக்க அவன் டிஸ்ப்ளே மாத்தனும் சர்விஸ் பண்ணனும் இப்போ என்கிட்ட ஸ்டாக் இல்ல நாளைக்கு வாங்கன்னு சொன்னான் நானும் பெரும் சோகத்தோடு செல்போனை பக்கத்தில் வச்சிட்டு படுத்து தூங்கினேன் காலையில முழிச்சி பார்த்தா எதோ லைட் நின்னு நின்னு எரியுற மாதிரி இருந்திச்சி பார்த்தா என்னோட செல்போன் டிஸ்ப்ளே எனக்கு போன் வர்றதை கஷ்டப்பட்டு சொல்லிக்கிட்டு இருக்கு ஐ லவ் யு டா செல்லம் ஐ லவ் யு 

37 comments:

நவீன் said...

அருமை அற்புதம் உன் மொகரக்கட்டையப் போலவே உன் கதை இருக்கு

Unknown said...

சொந்த அனுபவத்தை அப்படியே சிறுகதையாக்கியிருப்பது அருமை.
இடையிடையே இழையோடும் நகைச்சுவையான விவரிப்புகள் ரசிக்க வைக்கின்றன.
அடுத்த படைப்பு எப்போ?

ராஜகுமாரி said...
This comment has been removed by the author.
ராஜகுமாரி said...

இனி கற்பனை பாத்திரங்கள் உபயோகி தம்பி ...நகைச்சுவை மிகவும் நன்றாக இருந்தது

Elamurugu Manickam said...

பாஸ் ... என்னதான் கற்பனை கதைன்னு சொன்னாலும், கணக்கு டீச்சர்-யும் ரெகார்ட் நோட்-யும் லிங்க் பண்ணினது கொஞ்சம் ஓவர்-தான் பாஸ் ...

ரேணு said...

டேய் அடங்க மாட்டயா, எதுக்கு விளம்பரப்படுத்தர

சி.பி.செந்தில்குமார் said...

>>இப்படியாக எனது செல்போன் ஷகிலா படம் கணக்காய் விளம்பரமே இல்லாமல் பேச்சு வாக்கில் பிரபலமாக தொடங்கியது கர்ணணுக்கு எப்படி கவச குண்டலமோ,சோனியாகாந்திக்கு எப்படி மன்னுமோகனோ அப்படி நவினுக்கு செல்போன் என்று ஊர் பேசிக்கொண்டது

சபாஷ்!!!!!!!!!!!!!!

sundaravadivel said...

நல்ல ஆரம்பம் ..உனக்கு இயல்பாக நகைச்சுவை வரும் என்பதை நிருபித்து உள்ளாய் ..

Renu said...

பதிவு அருமை :-)

XXXXXXXXXXXXXXXXXX said...

Old is Gold என்று எங்களுக்குப் புரிய வைக்க நீங்கள், உங்கள் திறமையை நன்கு வெளிப்படுத்திருக்கிறீர்கள். அருமை. அற்புதம். ஆனந்தம்.. (இப்படியெல்லாம் சொல்லாட்டி நவீன் என் கமெண்ட்ட அழிச்சுடுவேன்னு மிரட்டினாருங்க)

sri said...

நல்லாருக்கு சார்..
இன்னும் உங்ககிட்ட நிறைய எதிர்பார்க்கறேன்...

XXXXXXXXXXXXXXXXXX said...

நிஜமாகவே நன்றாக எழுதியிருக்கிறீர்கள் நவீன். தொடர்ந்து எழுதுங்கள். முதல் முயற்சி போல தெரியவில்லை. நல்ல உவமைகளைக் கையாண்டிருப்பது சிறப்பு.

Mubarak Ali said...

நல்ல தமிழ் வார்த்தைகளை முழுவதும் பயன் படுத்தி கூட சிறப்பான சிறுகதைகளை படைக்க முடியும் என்பது வரலாறு. சிறுகதை என்பது ஒவ்வொரு காலத்தின் நிலையை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லக்கூடிய சக்தி பெற்றவை. அதனால் முடிந்த வரையில் தமிழ் சிறுகதைகளை நல்ல தமிழ் வார்த்தைகளை பயன்படுத்துங்கள் , இதை விட உங்களுக்கு நீங்கள் கேட்காமலே பாராட்டுக்கள் கிடைப்பது உறுதி வெற்றி வாகை சூட வாழ்த்துக்கள்

Unknown said...

//நீ உதயம் பாருக்கு வந்துடு //
பத்தாவது படிக்கும் போது??? (வெளங்குமா?)

K.Arivukkarasu said...

எழுத்து நடை நல்லா இருக்கு, டக்குன்னு முடிஞ்ச மாதிரி இருக்கு, நவீன். :-)

chinnapiyan said...

சொல்லவந்ததை உருப்படியா சொன்னீர்கள்.உங்களிடம் நிறைய விஷய ஞானம் உள்ளது.உங்கள் மனவோட்ட குதிரையை கொஞ்சம் கட்டுபடுத்தி சுருக்கினால் இன்னும் சுவையாக இருக்கும்.

Anonymous said...

பத்தாவதுலே பாருக்கு போன பையனா நீ? அன்பாலோ பண்ணிட்டு தான் அடுத்த வேலையே....:)) நல்ல நகைச்சுவை உணர்வு தம்பி உனக்கு...மேலும் வளர வாழ்த்துக்கள்...

Vijay said...

ஒரு செல்போன் தன் கதை கூறுதல்னு வச்சிருக்கலாம் நல்ல இருந்துச்சி

nithu_ji said...

முதல் கதைக்கு மிக மிக நன்று! தொடர்ந்து முயற்சியுங்கள்...

தும் ததா said...

தம்பி நீ வருங்காலத்துல சாரு மாதிரி வருவ....

Unknown said...

வார்த்தை பிரயோகம் அருமை ,மற்றபடி கதையில் விசயமில்லை ,நெருங்குன நண்பன்கிட்ட போய் சொல்ல மனம் வரலை

Anonymous said...

அருமையான நடை. அருகிலிருந்து பேசுவது போல் இருந்தது. நிறைய எழுதுங்கள் நண்பா. வாழ்த்துகள்.

iparisal@twitter.com said...

1. இது கதை அல்ல. அனுபவம். 2. நகைச்சுவை எழுத்து வருது. தொடர்ந்து முயற்சி செய்ங்க.3. என்னதான் நீங்க ஒரு பெரும்புள்ளியா இருந்தாலும், வரிகளுக்கிடையில ஒரு சிறு புள்ளி வைக்கிறது அவசியல். பல இடங்கள்ல புள்ளியே இல்ல.இரண்டாவது பாரா-வைப் பாருங்க... ஒரு புள்ளிகூட இல்ல! 4.. சில உவமைகள் 'அட!' சொல்ல வைக்குது!5.. 'காகித ரூபாய்கள்' என்கிற பதத்துக்கு ஸ்பெஷல் பாராட்டு! வாழ்த்துகள்!

வெங்கடேசன்.செ. said...

வார்த்தைக்கு வார்த்தை சிரிப்பூட்ட முயற்சித்தது வீண்போகல. முதல் முயற்சி என்பதை நம்ப முடியல. அவ்வளவு தெளிவான கதையோட்டம். ஆனால் 12ம் வகுப்பில் பார் என்பதில் மட்டும் நெருடல். மற்றபடி வெகு இயல்பான நடையில் அற்புதமான நகைச்சுவை விருந்து.

NAVIN. K said...

First time mathiri theriyale. nice scripting da. next time ithey mathiri vere characters vechi eludhu. Good...

VivekRamasamy said...

it is very nice one..carry on..

செல்வா said...

முதல்ல நிறைகள் :

*. நிறைய உவமைகள் ரொம்ப நல்லா இருக்கு.

*.இடைல இடைல வர்ற நகைச்சுவைகள் அருமை. அதாவது

--எனக்கு வேறு புகலிடம் கிடைக்காதால் வேறு வழியின்றி வீட்டிற்கே சென்று தஞ்சம் அடைந்தேன் ///

இந்த மாதிரி இன்னும் நிறைய இடங்களில் நல்லா இருக்கு.

//நடந்து போச்சு ஆமா அந்த செத்து போன செல் போனுக்கு காரியம் எல்லாம் நல்ல படியா முடிஞ்சதா ?” //

இந்த வரிகளும் நல்லா இருக்குங்க :)

அப்புறமா TR மாதிரி நகைச்சுவையாப் பேசுவான்னு சொன்னதும் செம நக்கலா இருக்கு. இப்படி நிறைய நிறைய இடங்களில் ரசிக்க வச்சிருக்கீங்க.


குறைகள் :

*.பரிசல் அண்ணன் சொன்னது மாதிர் இது அனுபவம் மாதிரி இருக்கிறதுதான் இத கதைனு ஏற்றுக்கொள்ள முடியல.

*.எழுத்துப் பிழைகள் சில இடங்களில் இருக்கு. இது போகப் போகச் சரியாகிடும்.

rajamelaiyur said...

அருமையான பதிவு

settaikaaran said...

ஹா ஹா ஹா இனி குனியாத நவீன் !

பத்மினி said...
This comment has been removed by the author.
பத்மினி said...

நல்ல நடை உம்மது. நகைச்சுவையும் இயல்பா வருது. இதில் எதுவோ லேசான வடிவம் மிஸ் ஆகுது பாஸ். வாக்கியங்களை நீளநீளமாய் எழுதாமல் குட்டிக்குட்டியாய் எழுத முயலுங்கள். சீக்கிரம் எழுத்து வசப்படும்.!

கோகுல் ஷர்மி said...

நல்ல நகைச்சுவை நடை. நீங்க இளைய சிங்கம் இல்ல , முதிர்ந்த சிங்கம் ( ஜோக்குல )

Rajan said...

எல்லாரும் எழுதற முதல் கதை மாதிரியே நீயும் எழுதிட்ட! அதுக்கும் எல்லாரும் வழக்கமா போடற கமெண்ட்டுகளையே போட்டுட்டாங்க! ரைட்டு!வாழ்த்துகள்! அடுத்த போஸ்ட் எழுதிட்டு லின்க் குடு! 100 தடவ கூட ப்ரூஃப் பாத்துக்கோ ஆனா தப்பு வராம டைப் பண்ண பழகு!

vennila said...

nalla muyarchi.............. vaazhthukkal nanbaa.........

Vadivel M said...

அந்த போன ஒடச்சிட்டா, இன்னும் பெட்டரா எழுதலாம்!

Vadivel M said...

செல்போன்ல காதலிக்கலாம்! செல்போனையே காதலிக்கலாமா?! ;-)

jroldmonk said...

ஹா ஹா நல்லா தான் இருக்கு.. நல்ல முயற்சி வாழ்த்துகள்.. தொடர்ந்து எழுதுங்க :-)