Sunday, November 27, 2011

மயக்கம் என்ன -செல்வராகவனின் முகவரி

மயக்கம் என்ன ரொம்ப நாள் கழிச்சி செல்வா தனுஷுடன் இணைந்த படம் ,பாட்டு எல்லாம் ஏற்கனவே ஹிட்டு,அதனால படத்துக்கும் எதிர்பார்ப்பு அதிகமா இருந்தது அது மட்டும் இல்லாமல் தீபாவளிக்கு அப்புறம் பெரிய படம் எதுவும் இல்லாம தம்பி வெட்டோத்தி சுந்தரம்,வித்தகன் இது மாதிரி பவர் ஸ்டார் ரசிகர்கள் படம் எல்லாம் பார்த்து நொந்து போயிருந்த மக்களுக்கு ஆறுதல சொல்ல வந்த படம். பொதுவா தனுஷ் செல்வா படத்தில் நல்லா நடிப்பார் இதலையும் தான் ஆனா எக்ஸ்ட்ராவா நாயகியும் நல்லா நடிசிருக்கு முதல் பாதியில் நாயகி நடிப்பு என்னடா இப்படி இருக்குன்னு நினைக்கவைக்குது ஆனா அப்புறமா நல்லா இருக்குன்னு  கண்டிப்பா சொல்லாலாம் (பாதி பேர் இது ஒரு காபி அடிச்ச நடிப்புன்னு சொன்னாங்க ஆனாலும் எனக்கு பிடிச்சது )...

கதை எல்லாம் ஒண்ணுமே இல்லை ஹீரோ

Monday, September 26, 2011

1100


(டிஸ்கி 1:இது என்னோட மொத கதை கொஞ்சம் அப்படி இப்படி தான் இருக்கும் தலைவலி மாத்திரை போட்டுகிட்டாவது படிச்சி முடிச்சிடுங்க )
(டிஸ்கி 2:எங்கேயும் எப்போதும் விமர்சன்ம 130பேர் படிச்சதா கவுன்டர் காமிக்கிது ஆனா 13 comment தான் இருக்கு ஒரு கமென்ட் போட்டா குறைஞ்சா போய்டுவிங்க எப்புடி இருக்குன்னு சொல்லிட்டு போங்கப்பா ) 

செல் போனுக்கும் எனக்கும் அப்படியொன்றும் பூர்வஜென்ம பந்தம் எல்லாம் இல்லை.பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது தான் எனது ஆஸ்தான செல்போன் நோக்கியா 1100 அறிமுகம் கிடைத்தது.

ஒரு நாள் கணக்கு வகுப்பில் பக்கத்தில் இருந்த பெண்ணை சீண்டிவிட்டு விட அவள் ஏற்கனவே ரெகார்ட் நோட் முடிக்காமல் இருக்க அதில் இருந்து தப்பிக்க இவன் தான் சரியான ஆள் என்று கணக்கு டீச்சரிடம் போட்டு கொடுத்தாள் அந்த டீச்சர் ஏற்கனவே அவர்களிடம் நான் டியூஷன் படிக்காமல் இருந்த கோபத்தோடு இதையும் சேர்த்து என்னை வெளிநடப்பு செய்யவச்சாங்க


எனக்கு வேறு புகலிடம் கிடைக்காதால் வேறு வழியின்றி வீட்டிற்கே சென்று தஞ்சம் அடைந்தேன் வீட்டில் அம்மா சந்தேக கண்ணோடு பார்த்தாங்க. தினமும் பள்ளிக்கூடம் முடிந்து ஒரு மணி நேரம் அதிகமா படிச்சிட்டு தானே வரும் புள்ள (வீக் ஸ்டுடன்ட் கிளஸ் ) இன்னைக்கு என்ன சீக்கிரம் வந்துடிச்சின்னு நினைச்சி என்னப்பா தம்பி சீக்கிரம் வந்துட்டான்னு கேக்க என்னத்த சொல்றது தெரியாம முழிக்க “எனக்கு செல் போன் வாங்கி குடுத்தா தான் ஸ்கூலுக்கு போவேன் எல்லா பசங்களும் வச்சிருக்காங்க என்கிட்டே மட்டும் இல்லைன்னுசம்பந்தம் இல்லாம பேச எங்கம்மாவுக்கு ஒண்ணுமே புரியலைன்னாலும் அன்னைக்குன்னு பார்த்து ரொம்ப நாளா வராம இருந்த வீட்டு வாடகை வந்ததாலும் என்னோட கருத்துக்கு செகன்ட் ஒபினியன் கேக்க ஆள் இல்லைங்கறதாலும் இந்தா ஒழிஞ்சி தொலை எதாவது பண்ணிக்கோ என்று ஒரு இரண்டாயிரம் பணமும் சில பல திட்டுகளும் கைக்கு வந்தது.

Monday, September 19, 2011

எங்கேயும் எப்போதும் -ஃபிகர்களின் அணி வரிசை


(ஒண்ணே ஒண்ணு சொல்லிக்கிறேன் வந்தவங்க கமென்ட் போட்டுட்டு போங்க யார் யார் வர்ரிங்கன்னே எத்தனை பேர் வர்ரிங்கன்னே தெரியமாட்டேங்குது குறைந்தபட்சம் நான் வந்தேன்னு உங்க பேராவது போட்டுட்டு போங்க )

எங்கேயும் எப்போதும் காதல் வரலாம், எங்கேயும் எப்போதும் விபத்துக்கள் நேரலாம் இது தான் படப்பெயர் காரணம் .....படத்தை பார்க்கும் போது படம் பார்க்கும் உணர்வே தோன்ற கூடதுன்னு நினைப்பவரா நீங்க உங்களுக்கு தான் இந்த படமே ...

படம் ஆரம்பிக்கும் போது ஒரு SETC பஸ் ஒரு தனியார் ஆம்னி பஸ் ரெண்டும் நேருக்கு நேர் மோதிக்கொள்கிறது அங்க இருந்து தான் படம் ஆரம்பிக்குது SETC பஸ்ஸில் ஜெய் ,அஞ்சலி,சரவ் திருச்சியில் இருந்து வர்றாங்க தனியார் பஸ்ல அனன்யா வர்றாங்க இப்போ தான் பிளாஷ் பேக்

Wednesday, August 31, 2011

மங்காத்தா இரண்டாவது பில்லாவா -விமர்சனம்

அஜித் அம்பதாவது படம் என்று பெரும் எதிர்பார்ப்பிலும்(அப்படி தான் சொன்னாங்க ) பெரும் பிரச்சனைகளிலும் வந்திருக்கும் படம் ...

அம்பதாவது படத்தில் சோலோவாக நடிக்காமல் கும்பலோடு நடித்த மனமுதிர்சிக்காக அஜித்தை பாராட்டலாம் .படத்தில் சற்று வயதான  போலிஸ் அதிகாரியாக  வருகிறார் அஜித் (தொப்பைக்கு காரணம் சொல்லியாச்சி அப்புறம் என்னடா ஹீரோ தொப்பயோட வரார்னு கேக்க கூடாது).கதை என்னவென்றால் ஐபிஎல் ஆட்டத்தில் சூதாட்ட பணம் ஜெயபிரகாஷ் மூலம் 500 கோடி கைமாற இருக்கிறது அதை அவரிடம் வேலை பார்க்கும் வைபவ் தனது முன்று நண்பர்களுடன் சேர்ந்து கொள்ளை அடிக்க முயற்சிக்க அவர்களுடன் இணைகிறார் அஜித்.பணத்தையும் கொள்ளை அடித்து விட அந்த பணத்தை ஐந்து பேரில் இரண்டு பேர் மட்டும் ஏமாற்றி எடுத்து சென்று விடுகின்றனர் இதனால் அஜீத் கடுப்பாகி செய்யும் வேலைகளே மீதி கதை

Tuesday, July 19, 2011

கேட்க கூடாத கேள்விகள்

ஜெயலலிதாவிடம் :இந்த எலெக்ஷன்ல மட்டும் எப்படி வோட்டு போடுற மெஷின் சரியா வேலை செஞ்சிச்சி?
அழகிரி:நீங்க 200க்கு மேல ஜெயிப்போம்னு சொன்னது அதிமுக பத்தி தான?
விஜயகாந்த்:சரியா சொல்லுங்க குவாட்டர் பாட்டிலில் 42% alcohol இருக்கும் அப்ப கட்டிங்க்ல எவ்ளோ இருக்கும்?
ராமதாஸ்:எல்லாரும் கேக்குற கேள்வி தான் நீங்க இப்போ எந்த கூட்டணில இருக்கீங்க?
சிதம்பரம்  :டக்குன்னு சொல்லுங்க பாப்போம் கடைசி எலெக்ஷன்ல நீங்க வாங்கின ஒட்டு எவ்ளோவு?
மன்மோகன்:ஆமா எது கேட்டாலும் தெரியாதுன்னு சொல்ல போறீங்க அப்புறம் ஏன் கேட்டுகிட்டு ?
தங்கபாலு:போங்க சார் உங்கள பாத்தாலே சிரிப்பு சிரிப்பா வருது கேள்வியெல்லாம் கேக்க முடியல
நித்தியானந்தா:பாஸ் நீங்க சேலம் சிவராஜிடம் வைத்தியம் பாக்குரிங்களா இல்லை பூஷன்ஜி பழனியப்பனிடமா ?

Sunday, June 12, 2011

தடை செய்யப் பட்ட இணையத் தளங்களில் நாம் எமது கை வரிசையைக் காட்ட

குறிப்பு;- நண்பர்களே / நண்பிகளே!!!
நீங்கள் மாட்டினால் நான் பொறுப்பில்லை.!

நாம் அதிகம் இணையதளம் பாவிக்கும் இடங்களான அலுவலகம், பாடசாலை, பல்கலைக்கழகம் என்பவற்றில் பல எமக்கு பிடித்த இணையதளங்கள் குறிப்பாக Facebook .com, blogspot .com என்பன Network Administrator ஆல் தடை செய்யப் பட்டிருக்கும். இந்த கட்டுப்பாடுகளை உடைத்து எப்படி உங்களுக்கு பிடித்த தடைசெய்யப்பட்ட தளங்களுக்கு செலவது என்பதற்கான 07 முறைகள். இவற்றில் சில சமயம் குறிப்பிட்ட ஒரு முறை பயனளிக்காத பட்சத்தில் மற்றைய முறையை கையாளலாம்.

குறிப்பு :- இந்த முறைகளை தடை செய்யப்பட்ட சட்டவிரோத இணைய தளங்களுக்கு செல்வதற்கு பயன்படுத்தல் வேண்டாம் .

Thursday, May 19, 2011

தேசிய திரைப்பட விருதுகள்

தேசிய திரைப்பட விருதுகள்: சிறந்த நடிகர் தனுஷ், சிறந்த நடிகை சரண்யா; சிறந்த இயக்குனர் வெற்றிமாறன்!

புதுடெல்லி, மே 19,2011

58-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில், முக்கிய விருதுகளை வென்று தமிழ் சினிமா ஆதிக்கம் செலுத்தியுள்ளது.