Sunday, November 27, 2011

மயக்கம் என்ன -செல்வராகவனின் முகவரி

மயக்கம் என்ன ரொம்ப நாள் கழிச்சி செல்வா தனுஷுடன் இணைந்த படம் ,பாட்டு எல்லாம் ஏற்கனவே ஹிட்டு,அதனால படத்துக்கும் எதிர்பார்ப்பு அதிகமா இருந்தது அது மட்டும் இல்லாமல் தீபாவளிக்கு அப்புறம் பெரிய படம் எதுவும் இல்லாம தம்பி வெட்டோத்தி சுந்தரம்,வித்தகன் இது மாதிரி பவர் ஸ்டார் ரசிகர்கள் படம் எல்லாம் பார்த்து நொந்து போயிருந்த மக்களுக்கு ஆறுதல சொல்ல வந்த படம். பொதுவா தனுஷ் செல்வா படத்தில் நல்லா நடிப்பார் இதலையும் தான் ஆனா எக்ஸ்ட்ராவா நாயகியும் நல்லா நடிசிருக்கு முதல் பாதியில் நாயகி நடிப்பு என்னடா இப்படி இருக்குன்னு நினைக்கவைக்குது ஆனா அப்புறமா நல்லா இருக்குன்னு  கண்டிப்பா சொல்லாலாம் (பாதி பேர் இது ஒரு காபி அடிச்ச நடிப்புன்னு சொன்னாங்க ஆனாலும் எனக்கு பிடிச்சது )...

கதை எல்லாம் ஒண்ணுமே இல்லை ஹீரோ
ஒரு போட்டோ கிராபர் அட கல்யாண போட்டோ கிராபர் எல்லாம் இல்லை இந்த டிஸ்கவரி ,நேஷனல் ஜியோ கிராபிக் அந்த லெவலில் வர்ற ஆசை படும் வைல்ட் லைப் போட்டோகிராபர் ஆனா அவர் திறமையை என்னோட திறமையை கண்டுக்காத மாதிரியே யாரும் கண்டுக்கறதே இல்லை ஆனாலும் கஷ்டப்பட்டு ஜெயிச்சிடுறார் அவார்ட் எல்லாம் வாங்குறார் என்னடா இது முகவரி படத்தோட கதை மாதிரி இருக்கேன்னு யாரும் கேட்க கூடாது ஏன்னா நடுவில் அடுத்தவன் காதலி தன்னை விரும்புவது ,மன சிதைவு ஏற்படுவது போன்றவற்றை காண்பித்து இருக்கிறார்.

படத்தை பார்த்த முக்காவாசி பேர் நெகடிவ் கமென்ட் தான் சொன்னாங்க ஆனா எனக்கு இந்த படம் ரொம்ப பிடிச்சிருந்தது ஒரு நாடக பாணியில்லாத வாழ்வியல் நிகழ்வுகளின் மிக நெருக்கமான படம் எடுத்துள்ளார் செல்வா. நான் படத்தை இரண்டு பகுதியாக எடுத்து கொண்டேன் ஒன்று நண்பன் காதலி தன்னை விரும்புவது தெரிந்தும் அதை ஏற்க முடியாமல்,விலக முடியாமல் தவிக்கும் ஒரு இளைஞன் மனம் பற்றியது மற்றொன்று தன் கனவுகள் சிதைந்த போது மனசிதைவு ஏற்படும் மனிதனின் வாழ்வியல் .இரண்டையும் தனி தனியே பார்த்தால் இது அருமையான படம்.

படத்தின் அடுத்த பலம் ஒளிப்பதிவும் பாடல்களும் வழக்கமா மெகா ஹிட் ஆகும் பாடல்களை படமா எடுக்கும் போது சொதப்புவாங்க (எவன்டி உன்னை பெத்தான் ,டாக்ஸி டாக்ஸி )ஆனா இவங்க பட்டும் சூப்பர் எடுத்தும் சூப்பர். பிண்ணனி இசை நிச்சயம் ஜிவியின் திறமை காட்டுகிறது.பாடல் ஒளிப்பதிவு,நடனம் எல்லாம் தாறுமாறு.

பலம் : 1.படத்தில் நிறைய இடங்களில் வரும் வசனங்கள் குட்டி குட்டி வசனங்கள்,2. முன்னாடியே சொன்ன மாதிரி இசை ,ஒளிப்பதிவு , இருவரின் ஆர்ப்பாட்டம் இல்லாத அசத்தல் நடிப்பு(முக்கியமா தான் கர்ப்பத்தை கலைத்து விட்டோம் என்று தெரிந்து தனுஷ் ரிச்சாவிடம் மன்னிப்பு கேட்பது அதற்கு ரிச்சாவின் ரியாக்ஷன் ) ,4.படத்தின் பாசிட்டிவ் க்ளிமெக்ஸ் நான் வழக்கமா ஷங்கர் படத்தில் கோர்ட்டு சீன்,செல்வா படத்தில் டெத் சீன் எதிர்பார்க்கும் ஆள் ஆனா இந்த படத்தில் அப்படி இல்லை

பலவீனம்:திரைக்கதையில் பல இடங்கள் மனம் போன போக்கில் எடுத்துள்ளார் செல்வா.2.ஒரு சாரசரி ரசிகனை பற்றிய நினைவே இல்லை செல்வாவுக்கு,3.படத்தில் கில்மா சீன் வைக்க நிறைய இடம் இருந்தும் அப்படி எதுவும் வைக்கவில்லை செல்வா முக்கியமா பல்லிக்கு பயந்து பாத்ரூம் கதவை திறந்து வைத்து இருக்கும் இடத்தில ஒரு சீன் வைத்திருக்கலாம் ஆனா வைக்கலா(ஆமா இது பலமா ,பல வீனமா ??) 4.ஒவ்வொரு காதாபாத்திரம் பற்றியும் தெளிவான விளக்கம் இல்லை யாருக்கோ டேட்டிங் செய்ய ஓகே சொல்லும் பெண் கணவனே கண் கண்ட தெய்வம் என்று வாழ்கிறாள்

மொத்ததில் இடைவேளை வரை எல்லாமே சூப்பர் அதுக்கு அப்புறம் இன்னும் கொஞ்சம் செதுக்கி இருந்தா நல்லா இருந்திருக்கும்.மயக்கம் என்ன என்னை மயக்கம் செய்த படம்.
16 comments:

இளஞ்சிங்கம் நவீன் said...

யாருமே கமென்ட் போடலைன்னா நமக்கு நேம் திட்டம் தான் நவீன்

டுபாக்கூர் பையன் said...

மயக்கமென்ன சித்திரத்தை இதை விடவும் இனிமையாக விமரிசிக்க எவராலும் இயலாது. செல்வராகவன் இதை வாசித்தால் சந்தோஷத்தில் இன்னொரு திருமணம் பண்ணிக் கொள்வான். நவீனுக்கு விமரிசனக் கலை நன்றாக வருகிறது.பெரிய பத்திரிக்கையாளராக வாய்ப்பு உள்ளது.

Anonymous said...

நிறைவான விமர்சனம்..

கவிதா said...

நவீன் விமர்சனம் சூப்பாரா இருந்தது ...உங்கள் எழுத்து மிக அருமை வருங்காலத்தில் மிக பெரிய எழுத்தாளர் ஆக வாழ்த்துக்கள் ......

Abdul Munaf said...

என்னையும் மயக்கம் செய்த படம்...
எந்த நெகடிவ் கமென்ட்டும் நான் தர மாட்டேன், இப்படத்துக்கு :)

நவீனின் விமர்சனம்- விமர்சை :)

amas said...

Nice review. Actually, though I had booked tickets did not see the movie due to earlier reviews. I don't think I would have seen it even if I had read yours earlier because I am very sensitive to women's issues and may not have been comfortable seeing the movie. But liked your analysis very much!
amas32

சி.பி.செந்தில்குமார் said...

>>3.படத்தில் கில்மா சீன் வைக்க நிறைய இடம் இருந்தும் அப்படி எதுவும் வைக்கவில்லை செல்வா முக்கியமா பல்லிக்கு பயந்து பாத்ரூம் கதவை திறந்து வைத்து இருக்கும் இடத்தில ஒரு சீன் வைத்திருக்கலாம் ஆனா வைக்கலா(ஆமா இது பலமா ,பல வீனமா ??)

யோவ்!! ஒய் திஸ் கில்மா வெறி?

சி.பி.செந்தில்குமார் said...

பொதுவா பெரும்பாலான படங்கள் செகண்ட் ஆஃப்ல தான் கண்டம் வாங்குது, அதற்கு இந்தப்படமும் விதி விலக்கல்ல, கம்ர்ஷியலாய் இந்தபடம் தோல்விதான் என்றாலும் மேக்கிங்க் ஸ்டைல், ஒளீப்பதிவு ஓக்கே

Giri Ramasubramanian said...

Good detailed review. Keep writing.Good detailed review. Keep writing.

இனியவன் என்றும். said...

சன் தொலைக்காட்சியில் வேட்டைக்காரன் படம் விமர்சனம் செய்ததைக்காட்டிலும் இந்த விமர்சனத்தை எழுதி செல்வராகவன் உங்களுக்கு ரொம்ப கடமைப்பட்டவராக்கிகொண்டீர்!!!வாழ்த்துக்கள்!! நவின் ,..இதன் மூலம் சன் தொலக்காட்சியில் விளம்பரப்பிரிவில் வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்பு வரலாம் எதிர்பார்த்து இருக்கவும்-ரெங்கராசு

கோவை நேரம் said...

படம் ரொம்ப மொக்கை என்று ஒரு நியூஸ் வருதே ..ஆனாலும் உங்க விமர்சனம் அருமை

S. L. Xavier said...

Short and Sweet Review... Very easy to read and view...
S. Lurthuxavier
Arumuganeri

கோமாளி செல்வா said...

// னா அவர் திறமையை என்னோட திறமையை கண்டுக்காத மாதிரியே யாரும் கண்டுக்கறதே இல்லை //

சரி நீயும் சிரமப்பட்டு எப்படியாவது முன்னுக்கு வந்திரு :))

விமர்சனம் நல்லா இருக்கு. ஆனா ஆங்காங்கே சிற்சில பிழைகள் :))

senthil said...

தம்பிரி, அட்னன்ஸ் போட்டாச்சி, போன் பண்ணி படிச்சயானு கேட்காதே

Butter_cutter said...

நான் சொல்லனும்ன்னு நினச்சத மேனேஜர் செந்தில் சொல்லீட்டாரு நான் இன்னும் என்னத்த சொல்ல ?

ஷர்மி said...

எனக்கும் படம் மிகவும் பிடித்தது. உங்கள் விமர்சணம் நிறைவாக உள்ளது. நாயகி கணவனே கண் கண்ட தெய்வம் என்று இருக்கிறாள் என்று ஏன் நினைக்கிறீர்கள், தான் நேசிப்பவனை விட்டு விளக முடியாமல் இருக்கிறாள் என்பது தான் சரி...