Posts

Showing posts with the label புத்தக விமர்சனம்

ஆப்பிளுக்கு முன்

ஆப்பிளுக்கு முன் எழுத்தாளர் சரவண கார்த்திகேயன் எழுதிய நாவல். சில மோசமான அனுபவங்கள் காரணமாக முகநூல் வழி அறிமுகமான எழுத்தாளர்களை தவிர்த்தே வந்தேன். இப்புத்தக வெளியீட்டு விழாவில் ரமேஷ் வைத்யாவின் நாவல் பற்றிய அறிமுகம் மிக சுவாரசியம் என்றாலும் அது புத்தகம் வாங்கும் ஆவலை தூண்டவில்லை. நண்பனிடம் இது பற்றி நண்பனிடம் பேசிக்கொண்டிருந்த போது அவன் சொன்னது "அதாண்டா தொழில் நேக்கு, உருட்டு அப்படி". முக நூலில் இப்படி ஒரு பதிவு பார்த்தேன் "உடல்  நினைவில் காடுள்ள மிருகம் - ஆப்பிளுக்கு முன் நாவலிலிருந்து", நாவலில் இது மட்டுமே இருக்கிறது, இதை தவிர இந்த வரிகளுக்கு வேறு எந்த விளக்கமும் இல்லையெனில் எழுத்தாளருக்கு ஒரு கைதட்டல். நக்கீரன் எழுதிய நாடோடிகள் நாவலில் வரும் வரிகள் " நினைவில் காடுள்ள மிருகம், எளிதில் அடங்குவதில்லை ", எழுத்தாளர் இவ்வாறு சொல்லவருகிறார் ",உடல் நினைவில் காடுள்ள மிருகம், அது எளிதில் அடங்குவதில்லை" , ஆக எழுத்தாளர் ஒரு குறிப்பை (அதுவும் மற்றொரு நாவலின் வரி) மட்டும் சொல்லிவிட்டு மீதத்தை வாசகனே பார்த்துக்கொள்ளட்டும் என நினைக்கிறார். பொதுவாய் நம் ...

மணற்கேணி

ஆசிரியர் : யுவன் சந்திரசேகர் பதிப்பகம் : உயிர்மை பதிப்பகம் விலை : Rs.180 பக்கங்கள் : 312 யுவன் சந்திரசேகர் தமிழின் தற்கால  பின் நவீனத்துவ கவிஞர்,எழுத்தாளர் அவர் எழுதிய மணற்கேணி .நூலகத்தில் எதேச்சையாகத்தான் படிக்க கிடைத்தது.பொதுவாக புத்தகங்களை மிக வேகமாக படித்து முடித்து விடும் என்னால் இந்த புத்தகத்தை முடிக்க ஒரு மாத காலம் பிடித்தது.எளிதில் கடந்து போய் விட முடியாத புத்தகம்.எனக்குள் முதல் முறையாக படித்ததும் பிரமிப்பை ஏற்படுத்தியவர்கள் இருவர் ஒருவர் சாரு நிவேதிதா மற்றுமொருவர் யுவன் சந்திர சேகரே. மொத்தம் நூறு குறுங்கதைகள் தனித்தனியாய் ஆனால் அவற்றினிடையே ஓடும் மெல்லிய நூல் ஒன்று அவற்றை நாவல் என்ற கட்டுக்குள் கட்டிவிடுகிறது.யுவன் சந்திரசேகரின் பிரதி பிம்பமாய் கிருஷ்ணன் என்ற வங்கி ஊழியரின் வாழ்க்கை சம்பவங்களே நூறு குறுங்கதைகளும்.மதுரை நகர் முழுவதும் நகரும் கதை சென்னையிலும் முடிவற்று தொடர்கிறது. தொடர்ச்சியாய் இல்லாமல் முன்னும் பின்னும் சிதறுகின்றன குறுங்கதைகள்.  மிக குறைவான வாக்கியங்கள் கொண்டே படைக்கபட்டிருக்கின்றன அவ்வளவு குறுங்கதைகளும் ,சாதரணமாய் கடந்து போகும் சில கதைகள் ...

அரசூர் வம்சம்

எந்த ஒரு இனத்துக்கும், சமூகத்திற்கும் மிகக்கடினமான விடயம் தங்கள் பண்பாடு , கலாச்சாரத்தை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கடத்துவது. இப்படி பாதுகாக்கவோ கடத்தவோ முடியாமல் அழிந்து போன இனம், மொழி பல. ஆனால் அப்படி தங்கள் கலச்சாரத்தை பாதுகாத்து கொள்ளும் இனங்கள் தனித்து நிற்கும். விமர்சனம் எத்தனையோ இருந்தாலும் யூதர்களை எனக்கு பிடிக்க முக்கிய காரணமே இது தான். யூத மதத்தில் மதம் மாறுதல் என்ற ஒன்றே இல்லை பிறப்பால் மட்டுமே யூத மதத்தினராய் இருக்க முடியும் அப்படி இருந்தும் அரசியல் நெருக்கடிகள், யூத மதத்திலிருந்து பிற மதத்திற்கு மதமாற்றங்கள், உலகம் முழுக்க எப்போதும் விரட்டியடிப்பு என பல துன்பங்களை சந்திக்க நேர்ந்தாலும் யூத பண்பாடு, கலாச்சாரம் என்ற ஒன்றை எப்போதும் அவர்கள் விட்டுக்கொடுத்ததேயில்லை. அதனால் தான் இன்று இஸ்ரேல் என்ற தனி நாடு அவர்களுக்கு கிட்டியது. அரசூர் வம்சம் சுமார் 150-200 வருடம் முன்னர் நடக்கும் கதை. வாரிசில்லா, அதிகாரமில்லா ராஜாவும் , அவர் அரண்மனை அருகே வசிக்கும்  ராஜாவை விட வசதியான  புகையிலை விற்கும் பிராமணக்குடும்பமும் தான் கதைக்களம். இருத்தல் வேண்டி புகையிலை விற...