Monday, September 19, 2011

எங்கேயும் எப்போதும் -ஃபிகர்களின் அணி வரிசை


(ஒண்ணே ஒண்ணு சொல்லிக்கிறேன் வந்தவங்க கமென்ட் போட்டுட்டு போங்க யார் யார் வர்ரிங்கன்னே எத்தனை பேர் வர்ரிங்கன்னே தெரியமாட்டேங்குது குறைந்தபட்சம் நான் வந்தேன்னு உங்க பேராவது போட்டுட்டு போங்க )

எங்கேயும் எப்போதும் காதல் வரலாம், எங்கேயும் எப்போதும் விபத்துக்கள் நேரலாம் இது தான் படப்பெயர் காரணம் .....படத்தை பார்க்கும் போது படம் பார்க்கும் உணர்வே தோன்ற கூடதுன்னு நினைப்பவரா நீங்க உங்களுக்கு தான் இந்த படமே ...

படம் ஆரம்பிக்கும் போது ஒரு SETC பஸ் ஒரு தனியார் ஆம்னி பஸ் ரெண்டும் நேருக்கு நேர் மோதிக்கொள்கிறது அங்க இருந்து தான் படம் ஆரம்பிக்குது SETC பஸ்ஸில் ஜெய் ,அஞ்சலி,சரவ் திருச்சியில் இருந்து வர்றாங்க தனியார் பஸ்ல அனன்யா வர்றாங்க இப்போ தான் பிளாஷ் பேக்


அனன்யா இண்டர்வியூக்கு சென்னை வர்ற பொண்ணு அந்த பொண்ணு கிட்ட  சென்னை ஒரு பெரிய புழல் ஜெயிலு இருக்குறவன் பூரா அக்யூஸ்ட்டு அப்படின்னு அவங்க அக்கா சொல்லிவுட அந்த பொண்ணும் பயத்தோட வந்து இறங்குது அங்க வழி காட்ட வந்தவர் தான் நம்ம ஹீரோ சரவ் (உடனே டூயட் பாட எல்லாம் போகதிங்க டைரக்டர் அப்படி எதுவும் பிளான் பண்ணல ) வேற வழி இல்லமா இண்டர்வியூ நடக்கற கம்பனி வரைக்கும் துணைக்கு போறார் உதவி பண்ண வந்த இவரையே பார்த்து சந்தேகப்படுவதும் அதற்கு அப்புறமான முன்ஜாக்கிரதையும் சத்தியாமா பாத்துகிட்டே இருக்கலாம்.இங்க தான் இயக்குனர் நம்மள குஷி படுத்துறார் அனன்யா -சரவ் போற வழி புல்ல சும்மா பொண்ணுங்களா வருது எங்க தான் புடிச்சாங்களோ இத்தனை பேரை  இவங்க எல்லாம் சென்னைல தான் இருக்காங்களா கண்ணுலேயே மாட்ட மாற்றாங்க நான் சத்யம் தியேட்டரும் ,சாந்தோம் பீச்சும் போகும்போது ஒரே வறண்ட பாலைவனம் தான் கண்ணுக்கு தெரியுது எதோ படத்துலாயாவது காமிக்கிறாங்க சந்தோசம்...

அஞ்சலி -ஜெய் ஜோடி மொட்டை மொட்டை மாடி ரெண்டு லவ் ஜோடி லவ் ஜோடி காதல்.. திருச்சியில்(சென்னைன்னு சொன்னா எல்லா படத்திலும் சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் காமிப்பங்க அதே மாதிரி திருச்சின்னு சொன்னா மலை கோட்டைய காமிக்கிறாங்க ) வேலை செய்யும் பயந்த சுபாவம் கொண்ட இளைஞர் அஞ்சலி சும்மா நம்ம ட்விட்டர் கணக்கா பேசிகிட்டே இருக்க பொண்ணு பையன மிரட்டி உருட்டி காதலிக்க வைக்குது இந்த பொண்ணு நிஜமாவே வெள்ளை போல பா டக்கரா கீது இது வரைக்கும் கருப்பவே காமிச்சிட்டங்க இதுல சூப்பரா இருக்கு நாலு பேர்ல கொஞ்சம் அதிகப்படிய நினைவில் நிற்பது இவர் தான்... ஜெய்யை தன்னோட அப்பா கிட்ட அனுப்பி வைக்கிறது ,பழைய காதலன் கிட்ட அனுப்பி அடி வாங்க வைக்கிறது ,எய்ட்ஸ் பரிசோதனை பண்றதுன்னு அங்க அங்க சின்ன சின்ன சிறுகதைகள் ஏராளம்

பொதுவா ராதாமோகன் படத்தில் வரும் சின்ன சின்ன கேரெக்டர் ரசிக்க வைப்பாங்க இதுலயும் அது மாதிரி தான் பஸ்சில் வரும் சக பயணிகள் ...புது மாப்பிள்ளை பொண்டாட்டிய கொஞ்சறது ..கல்லூரி மாணவன் பஸ்சிலேயே ஒரு பொண்ணை பிக் அப் செய்வது(ஆனாலும் என் இனமடா நீ )...துபாய் சென்று திரும்பி வரும் நபரின் செல் போன் ரிங் டோன் ....அந்த இரண்டு மணி நேரம் போவதே தெரியாது நமக்கு ..

படம் மொதல்ல இருந்தே விபத்து நடக்க போறதை கமிச்சிகிட்டே இருக்காங்க அதனால சஸ்பென்ஸ் போயிடுது ஒருவேளை கடைசில காமிச்சா பருத்தி வீரன் ,மைனா மாதிரி ஆகிடலாம்னு நினைசிருப்பார் போல சரவணன்...
பாடல்கள் மனதில் பதியவில்லை என்றாலும் உறுத்தாம அது பாட்டுக்கு போயிடுது எல்லா பாட்டையும் மண்டேஜ்ல எடுத்ததால பாட்டு சீன் வரும்போது தம் அடிக்க போக வேண்டியதில்லை.. கேமரா (டேய் நவீன் இதை பத்தி எல்லாம் சொல்ற அளவுக்கு நீ எப்ப பெரிய ஆள் ஆனா ) கதையின் தேவை உணர்ந்து அமைதியாக இயங்குகிறது...அந்த பஸ் ஆக்சிடென்ட் ஸ்லோ மோஷன் காட்சிகள் சூப்பர் .....

கடைசி கால் மணி நேரம் கனக்கிறது உடல் உறுப்பை தானம் செய்யும் கருத்தை சொல்ல முற்பட்ட இயக்குனருக்கு சபாஷ் ....பதினெட்டு வயதில் இருந்து நான்கு  மாதத்திற்கு ஒரு முறை என்று பன்னிரண்டு முறை ரத்த தானம் செய்த எனக்கு (பெருமைக்கு சொல்லவில்லை இதை பார்த்து ஒருவராவது ரத்ததானம் செய்யலாம் )இந்த படம் சத்தியமாக பிடித்திருக்கிறது...

மொத்தத்தில் படம் பக்கா மறுபடி கூட பார்க்கலாம் படம் முடிந்ததும் எனக்கு தோன்றியது இது தான் ச்சே வரும்போது ஹெல்மெட் எடுத்து வந்திருக்கலாமோ

டிஸ்கி :மதுராந்தகம் அலங்கார் தியேட்டர்ல படம் பார்த்தேன் யாராவது அங்க பார்க்க போனா கொசுவர்த்தி வாங்கிட்டு போங்க 

14 comments:

சி.பி.செந்தில்குமார் said...

>வந்தவங்க கமென்ட் போட்டுட்டு போங்க யார் யார் வர்ரிங்கன்னே எத்தனை பேர் வர்ரிங்கன்னே தெரியமாட்டேங்குது குறைந்தபட்சம் நான் வந்தேன்னு உங்க பேராவது போட்டுட்டு போங்க )

உள்ளேன் ஐயா

சி.பி.செந்தில்குமார் said...

>>
படம் மொதல்ல இருந்தே விபத்து நடக்க போறதை கமிச்சிகிட்டே இருக்காங்க அதனால சஸ்பென்ஸ் போயிடுது

100% கரெக்ட்... டெம்போவை ஏத்திவிட்டு நிதானமா காதல் கதை சொல்றது வேஸ்ட்

கிருத்திகன் said...

naanum vanten :)

Carfire said...

ஓட்டு எல்லாம் போட்டுருக்கேன் ராசா.. மறந்துறாத.....

soundarya said...

அருமை நவின் பாதி படம் பார்த்த உணர்வு...மேற்விபரங்களுக்கு வரவேண்டியதை(புரியுதா?) நோக்கி காத்திருக்கும் ....

ரங்கராஜ். said...

அருமை நவின் பாதி படம் பார்த்த உணர்வு...மேற்விபரங்களுக்கு வரவேண்டியதை(புரியுதா?) நோக்கி காத்திருக்கும் ....

prem kumar said...

படம் பார்பதே தெரியாமல் படம் எடுத்திருப்பது போல விமர்சனம் பண்ணுவதே தெரியாமல் அழகாக விமர்சனம் பண்ணிவிட்டீர்கள்

Anonymous said...

அடத்தூ இதெல்லாம் ஒரு பொழப்பாடா, போய் வேலை எதும் இருந்தா பாரு :P

Anonymous said...

நல்ல கருத்து சொன்ன சிங்கத்திற்கு நன்றிகள் பல

chinnapiyan said...

அய்யோ நான் என்னப்பா கெடுதல் செஞ்சேன் உனக்கு.வராத படத்துக்கு விமரிசனமா? அதையும் திரும்ப திரும்ப படித்தும் புரியாமல் பிரேம்குமார் போஸ்டை படித்தபிந்தான் உணர்ந்தேன்.நன்றி உங்களுக்கு அல்ல அந்த பிரேம்குமாருக்குத்தன்

உலக சினிமா ரசிகன் said...

நல்ல படத்துக்கு நல்ல விமர்சனம் எழுதிய நல்லவரே!
வாழ்க...வளர்க...
இப்படத்திற்க்கு நானும் நாலு வரி எழுதி உள்ளேன்.
வந்து பார்க்க அழைக்கிறேன்.

விரும்பி அழைக்கும்,
உலகசினிமாரசிகன்.

இளையசிங்கம் நவீன் said...

//உள்ளேன் ஐயா//நன்றி அய்யா
பிரேம் குமார் நீங்க பரட்டுரிங்க்ளா ஒட்ரிங்கலா
//அடத்தூ இதெல்லாம் ஒரு பொழப்பாடா, //
என்னோட ட்விட்டர் எதிரி யாராச்சும் இதை பண்ணியிருப்பாங்க போல
//வராத படத்துக்கு விமரிசனமா? //
படம் வந்து நாளு நாள் கழிச்சி தான் நான் பார்த்தேன்

K.Arivukkarasu said...

பதிவர்களின் ஆதரவாளன் நான். உங்கள் முயற்சி சிறக்க வாழ்த்துக்கள். :-)

Nondavan said...

I'm also present sir... ur regular follower