Wednesday, January 18, 2012

தற்கொலை-கண்ணீர்,காதல்,கலை


முடிவு செய்துவிட்டேன் தற்கொலை செய்துக்கொள்வது என்று ஆம் நிஜமாகவே நான் தற்கொலை செய்துக்கொள்ள போகிறேன். தற்கொலை கோழைத்தனம் என்றெல்லாம் எனக்கு உபதேசம் செய்ய வேண்டாம். எனது கதையை கேட்டால் நீங்கள் கூட தற்கொலை செய்துகொள்வீர்கள். அப்படி என்ன சோக கதை சொல்லுங்கள் கேட்கிறோம் என்று நீங்கள் நினைப்பது எனக்கு தெரிகிறது சொல்கிறேன் கேளுங்கள்... இல்லை வேண்டாம் எனது கதையை சொல்லி உங்களையும் சாகடிக்க நான் விரும்பவில்லை.

இந்த காலத்தில் வேலை இல்லாமல் இருப்பதை விட கொடுமையானது, மூவாயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை பார்ப்பது, அதையும் விட கொடுமை அந்த வேலை சில முட்டாள் காரணங்களுக்காக பறிபோவது. அப்படி வேலை பறிபோகும் அளவிற்கு என்ன நடந்தது என்றால், அன்று வேலை முடித்து வீடு திரும்ப போகும் நேரத்தில்... இல்லை வேண்டாம் ஏற்கனவே நீங்கள் நான் தற்கொலை செய்துக்கொள்ள் போவதை எண்ணி சோகத்தில் இருக்கீறிர்கள் உங்களை மேலும் சோகத்தில் ஆழ்த்த நான் விரும்பவில்லை.


தற்கொலை செய்துகொள்வதற்கு முன் அந்த மூன்று பேரையும் காட்டிகொடுத்து விட்டு தற்கொலை செய்துகொள்வதென்று தீர்மானித்தேன். ஆனால் நானே உயிரை விட போகிறேன் பழிவாங்கி என்ன ஆக போகிறது? என்று கடைசி நேரத்தில் மனம் மாறி விட்டுவிட்டேன். நில் யார் அந்த மூன்று பேர் என்கிறிர்களா? சொல்கிறேன் கேளுங்கள்... இல்லை வேண்டாம் நான் தற்கொலை செய்துகொண்ட பிறகு என் மரணத்திற்கு காரணம் அவர்கள் தான் என்று நீங்கள் அவர்களை போலிஸில் பிடித்து கொடுத்துவிடுவீர்கள். செத்தாலும் கெடுத்தான் என்று அவர்கள் என்னை நரகத்திற்கு போகுமாறு சபித்துவிடலாம்.

நான் தற்கொலை செய்துக்கொள்ள போகிறேன் என்றவுடன் எனக்கு என் காதலியின் நினைவே வந்தது. பிளக்ஸ் பேனரின் ப்ரிண்ட் செய்ய படாத வெள்ளை பகுதிகளை போன்றது அவள் மனது. அட இவனுக்கு காதல் தோல்வி அதான் யார் சொல்லியும் கேட்காமல் தற்கொலை செய்துக்கொள்ள போகிறான் என்று நீங்களாகவே ஒரு முடிவுக்கு வர வேண்டாம்.சொல்கிறேன் கேளுங்கள் எனது காதல் கதையை, நீங்கள் விரும்பாவிட்டாலும் கேட்டுத்தான் ஆக வேண்டும் கல்லூரியின் முதல் நாளில் வகுப்பறை வாசல் அருகே... இல்லை வேண்டாம் யார் என்றே தெரியாத உங்களிடம் எனது அந்தரங்க விஷயத்தை சொல்ல எனக்கு விருப்பமில்லை.

என்ன என் பேச்சில் அங்கங்கே இலக்கிய வாசனை அடிக்கிறதேயென்று யோசிக்கிறிர்களா?. படித்து முடித்து சில காலம் இலக்கியவியாதி பிடித்து திரிந்தேன். அந்த கதை நான் முன் கூறிய கதைகள் போல் அல்லாமல் சுவாரசியமாக இருக்கும் கேளுங்கள். எனது முதல் சிறுகதை ஒரு சிறுபத்திரிக்கயில் வெளியானது அதனை பெருமையாக எடுத்துகொண்டு வீதியில் வந்தேன் அப்போது.... இல்லை வேண்டாம் இலக்கியவாதி எழுதிய கதையை படிக்கவே பலர் தயாராக இல்லாத போது இலக்கியவாதியின் கதை(தி)யை கூறுவதில் பயனில்லை.

எப்படி சாக போகிறேன் என்றாவது உங்களிடம் சொல்லலாம் என்றால், அதை இந்த கணம் வரை முடிவு செய்யவில்லை. உலகில் வாழ எத்தனை வழி இருக்கிறதோ அத்தனை வழிகள் சாகவும் இருக்கும்போது நான் ஏன் முன்னமே முடிவு செய்து சாக வேண்டும். இப்போது மூளையை என் கால்கள் கட்டுப்படுத்திக்கொண்டு இருக்கின்றன அப்படியே கால் போன போக்கில் நான் சென்று கொண்டிருக்கிறேன். அட சற்று நில்லுங்கள் பக்கத்தில் ஒரு டிரெயின் வருகிறது முடிவு செய்துவிட்டேன் அந்த டிரெயின் முன்னால் விழுந்து தற்கொலை செய்து கொ.......................


15 comments:

இளஞ்சிங்கம் நவீன் said...

நன்றி

தற்கொலை செய்து கொ.....-சுஜாதா
இலக்கியவியாதி-twitter.com/navi_n

durais + said...

அவசரப்பட்டு பாஞ்சிறாதிங்க இது போகட்டும் அடுத்த டிரெயின் வர வரைக்கும் யோசிச்சு தற்கொலை செய்து கொ.....

#அருமை

சி.பி.செந்தில்குமார் said...

ஹா ஹா குட்

சோனியா said...

அந்த ஒரு இடத்தில் ...சரி விடுங்க செத்தவனுக்கு எதுக்கு கமென்ட் :-))

surendhar said...

savu thambi.......

Rajan said...

கமெண்ட் போடலைன்னா இவன் உடமாட்டான் போல! அவ்வ்வ்வ்

ப.செல்வக்குமார் said...

ரொம்ப நல்லா இருக்குடா. அதிலும் அந்த ப்ளக்ஸ் பேனரின் வெள்ளைப் பகுதி மாதிரியான உவமைகள் எல்லாம் ரொம்பவே நல்லா எழுதியிருக்க.

தொடங்கின விதமும் சூப்ப்ர்.. இலக்கிய வியாதியா வளர்ந்துட்டுத்தான் வர்றபோல :))

Vadivel M said...

தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு விமர்சனம் எழுதலாம்தான்,இல்லை வேண்டாம், நீயே தற்கொலை செய்யப் போகிறாய்! உன்னை ஏன் மேலும் சோகத்தில் ஆழ்த்த வேண்டும் என்று விடுகிறேன்! ;-)

Karuppiah said...

இலக்கிய வியாதி முத்திருச்சு பாஸ் உங்களுக்கு.

SHAN Shylesh said...

ஹா ஹா நச் :)

பிளக்ஸ் பேனர் போன்றது அவள் மனது அட அட அட (அடிக்கடி பிரிண்டு மாத்துவாங்களோ?)

Math avan said...

appada

Anonymous said...

very very nice

வேதாளம் said...

தற்கொலை பண்றேன்னு வர்றவன கொல்றியே மச்சி... நாயமா?

ravi shankar j said...

நல்ல கற்பனை :-)

InternetOnlineJobHelp said...

Nice Info - follow my Classified Website


classiindia Top India Classified website, SEO . Post One Time & get Life time Traffic.

New Classified Website Launch in India - Tamil nadu

No Need Registration . One time post your Articles Get Life time
Traffic. i.e No expired your ads life long it will in our website.
Don't Miss the opportunity.
Visit Here -------> www.classiindia.in