Tuesday, May 22, 2012

கல்விப்பண்ணைகள்

ஒரு வழியாய் இந்த வருட பிளஸ் 2 ரிசல்ட் வந்து விட்டது வழக்கம் போல் மாணவிகளே முதல் இடம்,ஏழையாய் மாறி டாக்டருக்கு சேவை செய்வேன் போன்ற செய்திதாள் பழைய மாவுகளை விட்டுவிட்டு பார்த்தால் இன்னுமொரு செய்தி முக்கியத்துவம் பெறுகிறது.

அது நாமக்கல் மாவட்டம் மாநில ரேங்கை தட்டி சென்றிருப்பது, அதுவும் மொத்தமாய் ஆறு இடங்கள் ஒன்றிரண்டு வருடங்களை தவிர பெரும்பாலும் தென் தமிழக குறிப்பாக சேலம்,நாமக்கல்,கோவை,போன்ற பகுதிகளை சேர்ந்த மாணவ,மாணவிகளே அதிகம் மாநில ரேங்க் பெறுகின்றனர்.



சரி நல்ல விஷயம் தானேன்னு பார்த்தா
அந்த மாநில ரேங்க் பெற்றவர்கள் அடுத்து என்னவாகிறார்கள் என்பது குழப்பமாகவே இருக்கிறது. பெரும்பாலும் அந்த மானவர்கள் தமிழ அரசு மருத்துவக்கல்லூரிகளிலோ, அண்ணா பொறியியல் கல்லுரிகளிலோ தான் சேர்கின்றனர்.

இவை புகழ் பெற்றவை தானே இதில் சேர்வதில் என்ன தவறு? என்று கேட்காதீர்கள் இவற்றை விட புகழ் பெற்ற ஐஐடி,ஐஐஎஸ்,போன்ற கல்லுரிகளில் இவர்கள் சேரவாவது முயற்சி எடுக்கின்றனரா என்றால் பதில் வருத்தமே. மாநில ரேங்க் எடுக்கும் பெரும்பலோனோர் தேசிய நுழைவுத்தேர்வுகளில் சோபிப்பதில்லை. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் மாநில ரேங்கை அநேகமாய் கோட்டை விடும் சென்னை மாவட்டம் ஐஐடி நுழைவுத்தேர்வு முடிவுகளில் எப்போதும் முதல் இடத்தில் இருப்பது.

கேரளா,ஆந்திரா போன்றவற்றோடு போட்டி போடும் அளவுக்கு நாம் ஐஐடியில் சோபிக்காததற்கு காரணம் நமது இலக்கு கிண்டியோடு நின்றுவிடுவது தான். நமது கல்வி நிலையங்கள் மனப்பாடத்தை மட்டுமே பாடத்திட்டமாக கொண்டுள்ளன அவற்றிற்கு தேவை மாநில,மாவட்ட ரேங்குகள்,நூறு சதவீத தேர்ச்சிகள் அதை ஒன்றை மட்டுமே இலக்காக கொண்டு செயல்படும் நிறுவனங்களில் நுழைவுத்தேர்வு பயிற்சி போன்றவை கனவு மட்டுமே.புரிந்து கொள்ளாமல் மனப்பாடம் செய்யும் அவர்களால் நுழைவுதேர்வுகளில் செயல்பட முடிவதில்லை. கல்வி நிறுவனத்திற்கும் நுழைவுத்தேர்வு போன்றவற்றால் பெரிய ஆதாயமில்லை எனவே அவர்களும் கண்டுக்கொள்வதில்லை.

அவற்றை குற்றம் சொல்லியும் ஒன்றுமில்லை பெற்றோரும் இதில் சம பங்கு வகிக்கின்றனர் நாளை முதல் நாமக்கல் மாவட்டத்தில்(எல்லா ஊர்லையும் தான்) பிளக்ஸ் பேனர்களில் மாநில ரேங்க் மாணவர்களின் புகைப்படத்தோடு பள்ளியின் பெயர்  கொட்டொழுத்தில் வரும் அந்த பள்ளிகளை நோக்கி பெற்றோர் படையெடுப்பர் அவர்கள் எல்கேஜிக்கு எழுவதாயிரம் கேட்டாலும் குடுத்து தொலைப்பர்,





இது ஒரு வகையான சுழற்சி நிர்ப்பந்தம். பெற்றோரை அந்த பள்ளியில் சேர சொல்லி மாநில ரேங்க் நிர்பந்திக்கிறது.மாணவர்களை மாநில ரேங்க் எடுக்க வேண்டும் என்று நிறுவன்ம் நிர்பந்திக்கிறது .இதில் பாதிப்படைவது மாணவர்களே அவர்கள் வெறும் மனப்பாட ரோபக்களாய் மாறிவிடுகின்றனர்.

கல்வி கற்கவே கல்வி நிறுவனங்கள் ஆனால் இங்கே மாணவர்கள் படிக்க தொடங்கிவிடுகின்றனர் கற்க அல்ல. தமிழகத்தின் இப்போதைய நல்ல விஷயம் நுழைவுத்தேர்வு என்பது இல்லை நுழைவுத்தேர்வு இருந்திருந்தால் பல மாணவர்களின் நிலை மிக கஷ்டமே. நல்ல மதிப்பெண் எடுத்திருந்தும் நுழைவுத்தேர்வு காலை வாரினால் அந்த நிலை உணர்ந்தால் மட்டுமே தெரியும்.

நாமக்கல்லில் கோழி பண்ணைகள் அதிகம் இந்த மதிப்பெண் விளையாட்டுக்களை பார்க்கும் போது மாணவர்கள் கோழிகளாக நிறுவனங்கள் கோழி பண்ணைகளாகவும் தான் தெரிகிறது கோழியை அறிந்தேனும் மதிப்பெண் முட்டையை எடுப்பதே அவர்கள் இலக்காக தெரிகிறது.

இதற்கான இன்ஸ்டண்ட் தீர்வு என்னிடத்தில் இல்லை ஆனால் நம் எல்லோரிடமும் இதற்கான தீர்வு உள்ளது..........

கடைசியா ஒரே ஒரு தத்துவம் மட்டும் சொல்லிக்கிறேன்....கல்வி கற்க வேண்டும் படிக்க அல்ல.....

5 comments:

Prabu Krishna said...

நல்ல கட்டுரை.

M(uthu)குமரன் said...

Ya thats true :) good one ...

Sridhar said...
This comment has been removed by the author.
Sridhar said...

//சென்னை மாவட்டம் ஐஐடி நுழைவுத்தேர்வு முடிவுகளில் எப்போதும் முதல் இடத்தில் இருப்பது///

இந்தியா அளவில் சென்னை பகுதி முதலிடம் பிடிபதற்க்கு கரணம் ஆந்திரா தான் . சென்னை மாணவர்களால் அல்ல !. ஐஐடிதேர்வுகளில் ஆந்திரா சென்னை பகுதியில் வரும்.

மற்ற மாவட்டத்தை விட சென்னை மாவட்டம் ஐஐடி தேர்வில் சிறப்பாக செய்யல படுவதற்கு காரணம் - exposure, CBSE syllabus.

Unknown said...

எனக்கும் இதே கருத்துதான் பாஸ்