Posts

வேலுவின் நீதிக்கதைகள்

Image
கரகாட்டக்காரன் வேலு ஒரு ஊர்ல திருவிழாவாம், திருவிழாவ பிரம்மாண்டமா பண்றதுக்காக தமிழ்நாட்லையே நம்பர் ஒன் கரகாட்டக்காரன் வேலுவ புக் பண்ணாங்க. திருவிழாவுக்கு மு தல் நாளே அவனும் வந்து தயாராக ஆரம்பிச்சிட்டான் ஊர்காரங்களும் அவன நல்லா கவனிச்சிட்டாங்க. திருவிழா அன்னைக்கு மேக் அப்லாம் போட்டுகிட்டு வந்து ரெடியா கோவில் தெருவுக்கு வந்துட்டான். கொஞ்ச நேரம் கழிச்சி நான் கரகாட்டம் ஆட முடியதுன்னிட்டான் ஏண்டான்னு கேட்டா   தெரு கோணலா இருக்குன்னான்.... நீதி: ஆட தெரியாதவன் மட்டும் அல்ல ஆட தெரிந்தவனும் தெரு கோணலா இருக்குன்னு சொல்லுவான். காதலித்தான் வேலு வேலுவும், சந்தியாவும் லவ்வர்ஸ். ரெண்டு பேரும் 2 வருஷமா கதறி கதறி லவ் பண்ணாங்க. ரெண்டு பேரும் போகாத ஊர் இல்ல சுத்தாத இடமில்ல. ஒரு நாள் வேலுவுக்கு பொறந்த நாள் ரெண்டு பேரும் ஐ நாக்ஸ்ல ஈவ்னிங் பட்த்துக்கு போறத பிளான். சந்தியா என்ன பண்ண சர்ப்ரைஸா இருக்கட்டும்னு காலையிலையே கிப்ட் வாங்கிட்டு வேலு விட்டுக்கு போனா. காலிங் பெல் அடிக்கலாம்னு நினைக்கும் போது உள்ள சந்தியான்னு எதோ குரல் கேட்ட்து சரி நம்மள பத்தி என்ன பேசுறான்னு கேப்போம்னு சந்...

ctrl+c ctrl+v

Image
சும்மா அப்போ அப்போ நான் கீச்சின சில கீச்சுகள்ல இருந்து சிலத ctrl+c , ctrl+v பண்ணியிருக்கேன் 1.உபயம்னு கோவிலுக்கு டியுப் லைட்ல பேர் எழுதி தர்றவன கூட மன்னிச்சிடலாம் ஆன குண்டு பல்புல இனிஷியல போட்டு தர்றவன எல்லாம் என்ன பண்றது.. 2.தாம்பரம் வந்தா கொஞ்சம் சொல்லுங்கன்னு சொல்லிட்டு சொன்னவன் தூங்கிடுவான் அவனுக்காக நாம முழிச்சிட்டே வர வேண்டியிருக்கும் 3,.பேஷன்ட் கோமவுல இருந்து திரும்ப ஒரே வழி திரும்ப திரும்ப அவங்கள கூப்பிடுறது தான் #தங்கம் சீரியல் 4."நவின்” ன்னு கூகுள்ல சர்ச் பண்ணா என்னோட பேரு மொத பக்கத்திலையே வருது இந்த ஒரு விஷயத்துக்காவது ட்விட்டர்ல இருக்கலாம்....

கல்விப்பண்ணைகள்

Image
ஒரு வழியாய் இந்த வருட பிளஸ் 2 ரிசல்ட் வந்து விட்டது வழக்கம் போல் மாணவிகளே முதல் இடம்,ஏழையாய் மாறி டாக்டருக்கு சேவை செய்வேன் போன்ற செய்திதாள் பழைய மாவுகளை விட்டுவிட்டு பார்த்தால் இன்னுமொரு செய்தி முக்கியத்துவம் பெறுகிறது. அது நாமக்கல் மாவட்டம் மாநில ரேங்கை தட்டி சென்றிருப்பது, அதுவும் மொத்தமாய் ஆறு இடங்கள் ஒன்றிரண்டு வருடங்களை தவிர பெரும்பாலும் தென் தமிழக குறிப்பாக சேலம்,நாமக்கல்,கோவை,போன்ற பகுதிகளை சேர்ந்த மாணவ,மாணவிகளே அதிகம் மாநில ரேங்க் பெறுகின்றனர். சரி நல்ல விஷயம் தானேன்னு பார்த்தா

கஸல் கவித

Image
(டிஸ்கி: இதையெல்லாம் கவிதைன்னு உனக்கு யார் சொன்னது அப்படின்னு நீங்க கேட்கலாம், கேட்கலைன்னாலும் அதான் உண்மை,வேணும்னா இதையெல்லாம் கவிதை version 1.0னு வச்சிக்கலாம் பியூச்சர் அப்டேட்ல சரி பண்ணிக்கலாம் ) பேருந்தில் என் மீது வீசும் உனது பார்வைக்கான அர்த்த புரிதல் இன்றி தவிக்கிறேன் கண்ணே சொல்லிவிடு என்னவென்று டிக்கட் வாங்க பணம் இல்லையா?! காலை கண்  விழித்ததும் உறைத்தது வானிலை நேற்று போல் இல்லை இன்று ஒரே பனி மூட்டம் வசந்தகாலம் முன்னரே ஆரம்பித்துவிட்டது என மனம் மகிழ்ச்சி அடைந்த வேளையில் தான் மூளையில் உறைத்தது இது பனி மூட்டம் அல்ல ஹங் ஓவர் என்று......!

தற்கொலை-கண்ணீர்,காதல்,கலை

Image
முடிவு செய்துவிட்டேன் தற்கொலை செய்துக்கொள்வது என்று ஆம் நிஜமாகவே நான் தற்கொலை செய்துக்கொள்ள போகிறேன். தற்கொலை கோழைத்தனம் என்றெல்லாம் எனக்கு உபதேசம் செய்ய வேண்டாம். எனது கதையை கேட்டால் நீங்கள் கூட தற்கொலை செய்துகொள்வீர்கள். அப்படி என்ன சோக கதை சொல்லுங்கள் கேட்கிறோம் என்று நீங்கள் நினைப்பது எனக்கு தெரிகிறது சொல்கிறேன் கேளுங்கள்... இல்லை வேண்டாம் எனது கதையை சொல்லி உங்களையும் சாகடிக்க நான் விரும்பவில்லை. இந்த காலத்தில் வேலை இல்லாமல் இருப்பதை விட கொடுமையானது, மூவாயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை பார்ப்பது, அதையும் விட கொடுமை அந்த வேலை சில முட்டாள் காரணங்களுக்காக பறிபோவது. அப்படி வேலை பறிபோகும் அளவிற்கு என்ன நடந்தது என்றால், அன்று வேலை முடித்து வீடு திரும்ப போகும் நேரத்தில்... இல்லை வேண்டாம் ஏற்கனவே நீங்கள் நான் தற்கொலை செய்துக்கொள்ள் போவதை எண்ணி சோகத்தில் இருக்கீறிர்கள் உங்களை மேலும் சோகத்தில் ஆழ்த்த நான் விரும்பவில்லை.

மயக்கம் என்ன -செல்வராகவனின் முகவரி

Image
மயக்கம் என்ன ரொம்ப நாள் கழிச்சி செல்வா தனுஷுடன் இணைந்த படம் ,பாட்டு எல்லாம் ஏற்கனவே ஹிட்டு,அதனால படத்துக்கும் எதிர்பார்ப்பு அதிகமா இருந்தது அது மட்டும் இல்லாமல் தீபாவளிக்கு அப்புறம் பெரிய படம் எதுவும் இல்லாம தம்பி வெட்டோத்தி சுந்தரம்,வித்தகன் இது மாதிரி பவர் ஸ்டார் ரசிகர்கள் படம் எல்லாம் பார்த்து நொந்து போயிருந்த மக்களுக்கு ஆறுதல சொல்ல வந்த படம். பொதுவா தனுஷ் செல்வா படத்தில் நல்லா நடிப்பார் இதலையும் தான் ஆனா எக்ஸ்ட்ராவா நாயகியும் நல்லா நடிசிருக்கு முதல் பாதியில் நாயகி நடிப்பு என்னடா இப்படி இருக்குன்னு நினைக்கவைக்குது ஆனா அப்புறமா நல்லா இருக்குன்னு  கண்டிப்பா சொல்லாலாம் (பாதி பேர் இது ஒரு காபி அடிச்ச நடிப்புன்னு சொன்னாங்க ஆனாலும் எனக்கு பிடிச்சது )... கதை எல்லாம் ஒண்ணுமே இல்லை ஹீரோ

1100

Image
(டிஸ்கி 1:இது என்னோட மொத கதை கொஞ்சம் அப்படி இப்படி தான் இருக்கும் தலைவலி மாத்திரை போட்டுகிட்டாவது படிச்சி முடிச்சிடுங்க ) (டிஸ்கி 2:எங்கேயும் எப்போதும் விமர்சன்ம 130பேர் படிச்சதா கவுன்டர் காமிக்கிது ஆனா 13 comment தான் இருக்கு ஒரு கமென்ட் போட்டா குறைஞ்சா போய்டுவிங்க எப்புடி இருக்குன்னு சொல்லிட்டு போங்கப்பா )  செல் போனுக்கும் எனக்கும் அப்படியொன்றும் பூர்வஜென்ம பந்தம் எல்லாம் இல்லை.பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது தான் எனது ஆஸ்தான செல்போன் நோக்கியா 1100 அறிமுகம் கிடைத்தது. ஒரு நாள் கணக்கு வகுப்பில் பக்கத்தில் இருந்த பெண்ணை சீண்டிவிட்டு விட அவள் ஏற்கனவே ரெகார்ட் நோட் முடிக்காமல் இருக்க அதில் இருந்து தப்பிக்க இவன் தான் சரியான ஆள் என்று கணக்கு டீச்சரிடம் போட்டு கொடுத்தாள் அந்த டீச்சர் ஏற்கனவே அவர்களிடம் நான் டியூஷன் படிக்காமல் இருந்த கோபத்தோடு இதையும் சேர்த்து என்னை வெளிநடப்பு செய்யவச்சாங்க எனக்கு வேறு புகலிடம் கிடைக்காதால் வேறு வழியின்றி வீட்டிற்கே சென்று தஞ்சம் அடைந்தேன் வீட்டில் அம்மா சந்தேக கண்ணோடு பார்த்தாங்க. தினமும் பள்ளிக்கூடம் முடிந்து...