Posts

நம்பி

Image
மந்திரியரே உங்களுக்கே தெரியும் இந்த நாட்டின் மானம்,மரியாதை இது வரை என் பரம்பரை கட்டிக்காத்த கவுரவம் எல்லாம் இப்போது உங்கள் கைகளில். நீங்கள் எடுக்கும் முடிவு எனக்கு,உங்களுக்கு மட்டுமல்ல இந்த நாட்டின் மன்னன் மீது நம்பிக்கை வைத்திருக்கும் லட்சோப லட்சம் மக்களுக்கும நன்மை பயக்க போகும் முடிவு ஆனால் இது வரை அந்த முடிவை பற்றி எதுவுமே சொல்லவில்லை நீங்கள். குறைந்தபட்சம் அதை பற்றிய ஆலோசனை கூட கேட்கவில்லை.மனதில் பட்டதை சொல்லுங்கள் நீங்கள் ஒருவர் மட்டும் மந்திரியில்ல மற்ற மந்திரிகளையும் ஆலோசிக்க வேண்டும்.உங்களையே நம்பி இருக்கிறேன் விரைவில் உங்கள் முடிவை சொல்லுங்கள். என்ன சார் இது கவர்மென்ட் ஆபிஸ்ல வேலைக்கு சேந்துட்டா எந்த வேலையும் பண்ண வேண்டாம்னு நினைச்சிட்டிங்களா? எனக்கு மேலையும் ஒரு ஆபிசர் இருக்காரு.அவருக்கு நான் பதில் சொல்லியாகனும் ஒரு வேலையை முடிக்க சொல்லி ஒரு வாரமாச்சி.இது வரைக்கும் ஒரு ஸ்டெப்பாவது எடுத்திருப்பிங்களா? என்னவோ ஆபிசே உங்கள நம்பி தான் இருக்கா மாதிரி வேலை செய்யுறிங்க.நிங்க இல்லைன்னாலும்  ஆபிஸ் நடக்கும் புரிஞ்சதா ?.என்ன பண்ணுவிங்களோ நாளைக்கு அந்த வேலைய முடிச்சிருக்...

சிதறல்

Image
வேலு தனக்கான இமெயில் முகவரியை துவக்கினான்.... முதல் நாள் கல்லூரிக்கு சென்றபோது பள்ளிக்கு சென்றதைபோல் அழுகை வராமல் சந்தோஷமாகத்தான் இருந்தது . இன்னும் நான்கு வருடத்தில் ஒரு இஞ்ஜினியர். இனி காலையில் சென்றதுமே பிரேயரில் கால் கடுக்க நிற்க வேண்டியது இல்லை,அந்த முட்டிக்கால் முட்டும் பெஞ்சில் சாயங்காலம் வரை உட்கார்ந்திருக்க வேண்டியதில்லை, கேரியரில் சாப்பாட்டை எடுத்து வந்து அதை அடுத்தவனுக்கு தெரியாமல் பாதுகாக்க வேண்டியதில்லை, முக்கியமாக பென்சிலில் படம் வரைய வேண்டியதில்லை பேனாவிலையே படம் வரையலாம் என பக்கத்து வீட்டு அண்ணா சொன்னான். வேலு கூகுளில் PN junction டையோடின் குண நலன்களை பற்றி தேடி கொண்டிருந்தான்...... எனது முன்னோர்களை போல் நான் பள்ளிக்கூட மாணவர்களிடம் அடை பட்டிருக்கவில்லை,எழுதி எழுதி ஆயுள் காலத்தை உடனே முடித்து கொள்வதற்கு. நான் ஒரு கல்லூரி மாணவனிடம் சேர்ந்திருந்தேன் அவன் தினத்துக்கு நாலு பக்கம் எழுதுவதே குறைவு. அதுவும் ஆசிரியர் பார்க்கும் போது எதையேனும் சும்மா கிறுக்குவான் அவ்வளவே. சந்தோஷம் தான் என்றாலும் என் இனத்தை நினைத்து பரிதாபமாக உள்ளது காலம் காலமாக நாங்கள் மனிதனுக்கு உபோயாகப்...

நிலவில் ஒரு வீட்டு மனை....

Image
ராயல் மூன் சிட்டி …ஒருங்கிணைந்த ஸ்பேஸ் ஷிப் நிலையத்திற்கு அருகே அழகான நகரம்..15 அடி ஆழ்த்தில் நல்ல தண்ணிர்..தரமான சாலை வசதி..சுகாதரமான சூழல்….பூங்காவுடன் கூடிய விளையாட்டு மைதானம்..அருகிலையே புதன் கிரகத்தில் பள்ளியும்..செவ்வாய் கிரகத்தில் இஞ்ஜினியரிங் கல்லூரியும் உள்ளன…மனையை பார்வையிட வாகன வசதி..முதலில் புக்கிங் செய்யும் 300 நபர்களுக்கு ஸ்பேஸ் கார் இலவசம்..குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் 2 அதிர்ஷ்டசாலிகளுக்கு பம்பர் பரிசாக ராக்கட் வழங்கப்படும்…. விரைவில் இது போன்ற விளம்பரங்கள் தொலைக்காட்சி,பத்திரிக்கை, பிட் நோட்டீஸ் வடிவில் உங்களை தேடி வந்தால் ஆச்சரியபடக்கூடாது என்பதற்காகவே இந்த முன் அறிவிப்பு கட்டுரை.ஆம் நிலவில் வீட்டு மனை போட்டு விற்க ஆரம்பித்து விட்ட்து லூனார் ரிஜிஸ்ட்ரி என்ற அமெரிக்க நிறுவனம்..எந்த நிலா என்று கேட்காதீர்கள் காலங்காலமாக கால் நீட்டியபடி பாட்டி வடை சுட்டுக்கொண்டிருக்கு அதே நிலாதான்.

வேலுவின் நீதிக்கதைகள்

Image
கரகாட்டக்காரன் வேலு ஒரு ஊர்ல திருவிழாவாம், திருவிழாவ பிரம்மாண்டமா பண்றதுக்காக தமிழ்நாட்லையே நம்பர் ஒன் கரகாட்டக்காரன் வேலுவ புக் பண்ணாங்க. திருவிழாவுக்கு மு தல் நாளே அவனும் வந்து தயாராக ஆரம்பிச்சிட்டான் ஊர்காரங்களும் அவன நல்லா கவனிச்சிட்டாங்க. திருவிழா அன்னைக்கு மேக் அப்லாம் போட்டுகிட்டு வந்து ரெடியா கோவில் தெருவுக்கு வந்துட்டான். கொஞ்ச நேரம் கழிச்சி நான் கரகாட்டம் ஆட முடியதுன்னிட்டான் ஏண்டான்னு கேட்டா   தெரு கோணலா இருக்குன்னான்.... நீதி: ஆட தெரியாதவன் மட்டும் அல்ல ஆட தெரிந்தவனும் தெரு கோணலா இருக்குன்னு சொல்லுவான். காதலித்தான் வேலு வேலுவும், சந்தியாவும் லவ்வர்ஸ். ரெண்டு பேரும் 2 வருஷமா கதறி கதறி லவ் பண்ணாங்க. ரெண்டு பேரும் போகாத ஊர் இல்ல சுத்தாத இடமில்ல. ஒரு நாள் வேலுவுக்கு பொறந்த நாள் ரெண்டு பேரும் ஐ நாக்ஸ்ல ஈவ்னிங் பட்த்துக்கு போறத பிளான். சந்தியா என்ன பண்ண சர்ப்ரைஸா இருக்கட்டும்னு காலையிலையே கிப்ட் வாங்கிட்டு வேலு விட்டுக்கு போனா. காலிங் பெல் அடிக்கலாம்னு நினைக்கும் போது உள்ள சந்தியான்னு எதோ குரல் கேட்ட்து சரி நம்மள பத்தி என்ன பேசுறான்னு கேப்போம்னு சந்...

ctrl+c ctrl+v

Image
சும்மா அப்போ அப்போ நான் கீச்சின சில கீச்சுகள்ல இருந்து சிலத ctrl+c , ctrl+v பண்ணியிருக்கேன் 1.உபயம்னு கோவிலுக்கு டியுப் லைட்ல பேர் எழுதி தர்றவன கூட மன்னிச்சிடலாம் ஆன குண்டு பல்புல இனிஷியல போட்டு தர்றவன எல்லாம் என்ன பண்றது.. 2.தாம்பரம் வந்தா கொஞ்சம் சொல்லுங்கன்னு சொல்லிட்டு சொன்னவன் தூங்கிடுவான் அவனுக்காக நாம முழிச்சிட்டே வர வேண்டியிருக்கும் 3,.பேஷன்ட் கோமவுல இருந்து திரும்ப ஒரே வழி திரும்ப திரும்ப அவங்கள கூப்பிடுறது தான் #தங்கம் சீரியல் 4."நவின்” ன்னு கூகுள்ல சர்ச் பண்ணா என்னோட பேரு மொத பக்கத்திலையே வருது இந்த ஒரு விஷயத்துக்காவது ட்விட்டர்ல இருக்கலாம்....

கல்விப்பண்ணைகள்

Image
ஒரு வழியாய் இந்த வருட பிளஸ் 2 ரிசல்ட் வந்து விட்டது வழக்கம் போல் மாணவிகளே முதல் இடம்,ஏழையாய் மாறி டாக்டருக்கு சேவை செய்வேன் போன்ற செய்திதாள் பழைய மாவுகளை விட்டுவிட்டு பார்த்தால் இன்னுமொரு செய்தி முக்கியத்துவம் பெறுகிறது. அது நாமக்கல் மாவட்டம் மாநில ரேங்கை தட்டி சென்றிருப்பது, அதுவும் மொத்தமாய் ஆறு இடங்கள் ஒன்றிரண்டு வருடங்களை தவிர பெரும்பாலும் தென் தமிழக குறிப்பாக சேலம்,நாமக்கல்,கோவை,போன்ற பகுதிகளை சேர்ந்த மாணவ,மாணவிகளே அதிகம் மாநில ரேங்க் பெறுகின்றனர். சரி நல்ல விஷயம் தானேன்னு பார்த்தா

கஸல் கவித

Image
(டிஸ்கி: இதையெல்லாம் கவிதைன்னு உனக்கு யார் சொன்னது அப்படின்னு நீங்க கேட்கலாம், கேட்கலைன்னாலும் அதான் உண்மை,வேணும்னா இதையெல்லாம் கவிதை version 1.0னு வச்சிக்கலாம் பியூச்சர் அப்டேட்ல சரி பண்ணிக்கலாம் ) பேருந்தில் என் மீது வீசும் உனது பார்வைக்கான அர்த்த புரிதல் இன்றி தவிக்கிறேன் கண்ணே சொல்லிவிடு என்னவென்று டிக்கட் வாங்க பணம் இல்லையா?! காலை கண்  விழித்ததும் உறைத்தது வானிலை நேற்று போல் இல்லை இன்று ஒரே பனி மூட்டம் வசந்தகாலம் முன்னரே ஆரம்பித்துவிட்டது என மனம் மகிழ்ச்சி அடைந்த வேளையில் தான் மூளையில் உறைத்தது இது பனி மூட்டம் அல்ல ஹங் ஓவர் என்று......!