Posts

வேலுவின் நீதிக்கதைகள் -2

Image
வேலுவின் நீதிக்கதைகள் பற்றி அறியாதவர்களுக்கு வேலுவின் நீதிக்கதைகள் -1 வேலுவே எழுதிய நீதிக்கதை : ஒரு காட்டுல ஒரு பாட்டி வடை சுட்டு வித்துட்டு இருந்தாளாம். காட்டு மிருகமெல்லாம் அங்க வந்து வடை வாங்கி சாப்பிட்டு போகுமாம்.அந்த காட்டுல ஒரு காக்காவும் இருந்துச்சாம். அதுக்கு வடை சாப்பிடனும்னு ரொம்ப நாள் ஆசையாம். ஆனா பாவம் அது கிட்ட வடை வாங்க காசே இல்லையாம். என்ன பண்ணலாம்னு சோகமா யோசிச்சிட்டு இருக்கும் போது ஆமை வந்து என்ன பிரச்சனை ஏன் சோகமா இருக்கேன்னு கேட்டுச்சாம். காக்காவும் வடைய பத்தி சொல்லுச்சாம். ஆமை, நீ பாட்டி அசந்த நேரம் பார்த்து வடைய தூக்கிட்டு வந்துடுன்னுச்சாம். ரெண்டு நாள் கழிச்சி ஆமை வந்துச்சாம் என்ன ஆச்சு வடையை தூக்கிட்டியான்னு கேட்டுச்சாம். அட நீ வேற விடப்பான்னுச்சாம். ஏம்ப்பா என்ன ஆச்சுன்னுச்சாம் ஆமை. நான் வடைய தூக்க போகும் போதெல்லாம் மாட்டிக்கிறேன் எனக்கு லாங்க் சைட் வேறையா கிட்ட போகும் போது எது வடை சட்டி எது எண்ணெய் சட்டின்னே தெரிய மாட்டேங்குது. ஒண்ணு பாட்டிக்கிட்ட மாட்டிக்கிறேன் இல்லைன்னா எண்ணெய் சட்டில சூடு வச்சிக்கிறேன் அப்படின்னுச்சாம் காக்கா. சரி ஒ...

தூங்குதலின் குறிப்புகள்....

Image
குப்புறபடுத்தலின் குறிப்புகள்.... மல்லாkக படுத்து யோசிப்பதை விட குப்புற படுத்து யோசித்தால் சிந்தனை எளிதில் வசப்படும் மல்லாக்க படுப்பதென்பது மனிதனுக்கு மட்டுமே உரியது என்பதால் இயற்கையோடு இணைய குப்புறபடுப்பதே சிறந்ததென்பது என் எண்ணம்.. தொப்பை கரைய குப்புறபடுக்கலாம் என்பது புத்திசாலி சோம்பேறிகளின் உடற்பயிற்சி சிந்தனைகளில் ஒன்று... இரவில் தூங்கும்போது நமக்குச் சிறகு முளைத்தால் குப்புறபடுத்தவன் அப்படியே பறந்துவிடலாம் மல்லாக்கப்படுத்தவன் புரண்டு பறக்க வேண்டும்.. குழந்தையாய் இருக்கும்போது தானே புரண்டு குப்புறப்படுப்பதே நாம் தவழ,நடக்க எடுக்கும் முதல் முயற்சி.... எதிர்காலத்தில் நின்றுகொண்டே தூங்குமாறு பரிணாம குழப்பம் ஏற்படலாம் என்றால் இப்போதே குப்புறபடுத்தி பழக்கபடுத்தி கொள்ளுதலே நல்லது மின்சாரம் இல்லாத நேரத்தில் மல்லாக்க படுத்து ஓடாத மின் விசிறியை பார்த்து ஆட்கொணா துயரில் ஆழ்வதற்கு குப்புறபடுத்தலே மேல்.. மல்லாக்கப்படுத்தலின் குறிப்புகள்.... மல்லாக்கப் படுத்தல் மனித இனத்திற்கு மட்டுமே உரிய பகுத்தறிவு குணங்களில் ஒன்று... மல்லாக்கப் படுத்து கொஞ்ச நேரமே ஓடும் மின் விசி...

ஆறு கால் பிராணி

Image
கால்களின் ஓரத்தில் ஆறு கால் பிராணி ஒன்று இடது காலின் பக்கத்தில் இருந்த எனது வலது காலை உராசிக்கொண்டு சென்றது.பிரமையா இருக்கும்னு விட்டுட்டேன் பிரமையா தான் இருக்கனும். முன்பு ஒரு நாள் கனவில் நாலு கால் பிராணி ஒன்று துள்ளிகுதித்து ஓடியது,  நான் அதை முயல் அல்லது நாய் என்று சந்தேகப்பட்டேன் இப்போது தான் தோன்றுகிறது தூக்கத்தில் சரியாக கவனிக்காமல் விட்ருக்கலாம் அதற்கு ஆறு கால்கள் இருந்திருக்குமோ ??? அந்த ஆறுகால் பிராணியை பிடிக்காமல் விட்டதற்கு இன்னோரு காரணமும் உண்டு. பொதுவாக ஆறு கால் பிராணிகளுக்கு எந்த வகை உணவு அளிப்பது என எந்த புத்தகத்திலும் இல்லை.நான் ஒரு வேளை அதை பிடிக்கும் வேலை அது உணவு அருந்தும் வேளையாக இருந்தால் வேறு எந்த உணவும் கிடைக்காமல் நம்மை உண்டு விடும் சாத்தியகூறுகளும் உண்டு. ஆறுகால் பிராணிகளின் வேகம் பற்றி முன்னமே நான் ஒரு ரகசிய புத்தகத்தில் படித்தது உண்டு. அவை வாயு வேகம் மனோவேகம் போன்ற வேகங்களில் செல்லாமல் சாதாரண நாலு கால் பிராணிகளின் வேகத்திலேயே செல்லுமென ஆனால் இந்த ஆறுகால் பிராணி நான் பார்த்து பிடிக்காலாமா என யோசனை செய்யும் முன்பே ஓடி விட்டது .இத...

நம்பி

Image
மந்திரியரே உங்களுக்கே தெரியும் இந்த நாட்டின் மானம்,மரியாதை இது வரை என் பரம்பரை கட்டிக்காத்த கவுரவம் எல்லாம் இப்போது உங்கள் கைகளில். நீங்கள் எடுக்கும் முடிவு எனக்கு,உங்களுக்கு மட்டுமல்ல இந்த நாட்டின் மன்னன் மீது நம்பிக்கை வைத்திருக்கும் லட்சோப லட்சம் மக்களுக்கும நன்மை பயக்க போகும் முடிவு ஆனால் இது வரை அந்த முடிவை பற்றி எதுவுமே சொல்லவில்லை நீங்கள். குறைந்தபட்சம் அதை பற்றிய ஆலோசனை கூட கேட்கவில்லை.மனதில் பட்டதை சொல்லுங்கள் நீங்கள் ஒருவர் மட்டும் மந்திரியில்ல மற்ற மந்திரிகளையும் ஆலோசிக்க வேண்டும்.உங்களையே நம்பி இருக்கிறேன் விரைவில் உங்கள் முடிவை சொல்லுங்கள். என்ன சார் இது கவர்மென்ட் ஆபிஸ்ல வேலைக்கு சேந்துட்டா எந்த வேலையும் பண்ண வேண்டாம்னு நினைச்சிட்டிங்களா? எனக்கு மேலையும் ஒரு ஆபிசர் இருக்காரு.அவருக்கு நான் பதில் சொல்லியாகனும் ஒரு வேலையை முடிக்க சொல்லி ஒரு வாரமாச்சி.இது வரைக்கும் ஒரு ஸ்டெப்பாவது எடுத்திருப்பிங்களா? என்னவோ ஆபிசே உங்கள நம்பி தான் இருக்கா மாதிரி வேலை செய்யுறிங்க.நிங்க இல்லைன்னாலும்  ஆபிஸ் நடக்கும் புரிஞ்சதா ?.என்ன பண்ணுவிங்களோ நாளைக்கு அந்த வேலைய முடிச்சிருக்...

சிதறல்

Image
வேலு தனக்கான இமெயில் முகவரியை துவக்கினான்.... முதல் நாள் கல்லூரிக்கு சென்றபோது பள்ளிக்கு சென்றதைபோல் அழுகை வராமல் சந்தோஷமாகத்தான் இருந்தது . இன்னும் நான்கு வருடத்தில் ஒரு இஞ்ஜினியர். இனி காலையில் சென்றதுமே பிரேயரில் கால் கடுக்க நிற்க வேண்டியது இல்லை,அந்த முட்டிக்கால் முட்டும் பெஞ்சில் சாயங்காலம் வரை உட்கார்ந்திருக்க வேண்டியதில்லை, கேரியரில் சாப்பாட்டை எடுத்து வந்து அதை அடுத்தவனுக்கு தெரியாமல் பாதுகாக்க வேண்டியதில்லை, முக்கியமாக பென்சிலில் படம் வரைய வேண்டியதில்லை பேனாவிலையே படம் வரையலாம் என பக்கத்து வீட்டு அண்ணா சொன்னான். வேலு கூகுளில் PN junction டையோடின் குண நலன்களை பற்றி தேடி கொண்டிருந்தான்...... எனது முன்னோர்களை போல் நான் பள்ளிக்கூட மாணவர்களிடம் அடை பட்டிருக்கவில்லை,எழுதி எழுதி ஆயுள் காலத்தை உடனே முடித்து கொள்வதற்கு. நான் ஒரு கல்லூரி மாணவனிடம் சேர்ந்திருந்தேன் அவன் தினத்துக்கு நாலு பக்கம் எழுதுவதே குறைவு. அதுவும் ஆசிரியர் பார்க்கும் போது எதையேனும் சும்மா கிறுக்குவான் அவ்வளவே. சந்தோஷம் தான் என்றாலும் என் இனத்தை நினைத்து பரிதாபமாக உள்ளது காலம் காலமாக நாங்கள் மனிதனுக்கு உபோயாகப்...

நிலவில் ஒரு வீட்டு மனை....

Image
ராயல் மூன் சிட்டி …ஒருங்கிணைந்த ஸ்பேஸ் ஷிப் நிலையத்திற்கு அருகே அழகான நகரம்..15 அடி ஆழ்த்தில் நல்ல தண்ணிர்..தரமான சாலை வசதி..சுகாதரமான சூழல்….பூங்காவுடன் கூடிய விளையாட்டு மைதானம்..அருகிலையே புதன் கிரகத்தில் பள்ளியும்..செவ்வாய் கிரகத்தில் இஞ்ஜினியரிங் கல்லூரியும் உள்ளன…மனையை பார்வையிட வாகன வசதி..முதலில் புக்கிங் செய்யும் 300 நபர்களுக்கு ஸ்பேஸ் கார் இலவசம்..குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் 2 அதிர்ஷ்டசாலிகளுக்கு பம்பர் பரிசாக ராக்கட் வழங்கப்படும்…. விரைவில் இது போன்ற விளம்பரங்கள் தொலைக்காட்சி,பத்திரிக்கை, பிட் நோட்டீஸ் வடிவில் உங்களை தேடி வந்தால் ஆச்சரியபடக்கூடாது என்பதற்காகவே இந்த முன் அறிவிப்பு கட்டுரை.ஆம் நிலவில் வீட்டு மனை போட்டு விற்க ஆரம்பித்து விட்ட்து லூனார் ரிஜிஸ்ட்ரி என்ற அமெரிக்க நிறுவனம்..எந்த நிலா என்று கேட்காதீர்கள் காலங்காலமாக கால் நீட்டியபடி பாட்டி வடை சுட்டுக்கொண்டிருக்கு அதே நிலாதான்.

வேலுவின் நீதிக்கதைகள்

Image
கரகாட்டக்காரன் வேலு ஒரு ஊர்ல திருவிழாவாம், திருவிழாவ பிரம்மாண்டமா பண்றதுக்காக தமிழ்நாட்லையே நம்பர் ஒன் கரகாட்டக்காரன் வேலுவ புக் பண்ணாங்க. திருவிழாவுக்கு மு தல் நாளே அவனும் வந்து தயாராக ஆரம்பிச்சிட்டான் ஊர்காரங்களும் அவன நல்லா கவனிச்சிட்டாங்க. திருவிழா அன்னைக்கு மேக் அப்லாம் போட்டுகிட்டு வந்து ரெடியா கோவில் தெருவுக்கு வந்துட்டான். கொஞ்ச நேரம் கழிச்சி நான் கரகாட்டம் ஆட முடியதுன்னிட்டான் ஏண்டான்னு கேட்டா   தெரு கோணலா இருக்குன்னான்.... நீதி: ஆட தெரியாதவன் மட்டும் அல்ல ஆட தெரிந்தவனும் தெரு கோணலா இருக்குன்னு சொல்லுவான். காதலித்தான் வேலு வேலுவும், சந்தியாவும் லவ்வர்ஸ். ரெண்டு பேரும் 2 வருஷமா கதறி கதறி லவ் பண்ணாங்க. ரெண்டு பேரும் போகாத ஊர் இல்ல சுத்தாத இடமில்ல. ஒரு நாள் வேலுவுக்கு பொறந்த நாள் ரெண்டு பேரும் ஐ நாக்ஸ்ல ஈவ்னிங் பட்த்துக்கு போறத பிளான். சந்தியா என்ன பண்ண சர்ப்ரைஸா இருக்கட்டும்னு காலையிலையே கிப்ட் வாங்கிட்டு வேலு விட்டுக்கு போனா. காலிங் பெல் அடிக்கலாம்னு நினைக்கும் போது உள்ள சந்தியான்னு எதோ குரல் கேட்ட்து சரி நம்மள பத்தி என்ன பேசுறான்னு கேப்போம்னு சந்...