Tuesday, January 31, 2012

கஸல் கவித


(டிஸ்கி: இதையெல்லாம் கவிதைன்னு உனக்கு யார் சொன்னது அப்படின்னு நீங்க கேட்கலாம், கேட்கலைன்னாலும் அதான் உண்மை,வேணும்னா இதையெல்லாம் கவிதை version 1.0னு வச்சிக்கலாம் பியூச்சர் அப்டேட்ல சரி பண்ணிக்கலாம் )


பேருந்தில் என் மீது வீசும்
உனது பார்வைக்கான
அர்த்த புரிதல் இன்றி
தவிக்கிறேன் கண்ணே
சொல்லிவிடு என்னவென்று
டிக்கட் வாங்க பணம் இல்லையா?!


காலை கண் 
விழித்ததும் உறைத்தது
வானிலை நேற்று போல்
இல்லை இன்று
ஒரே பனி மூட்டம்
வசந்தகாலம் முன்னரே
ஆரம்பித்துவிட்டது என
மனம் மகிழ்ச்சி அடைந்த
வேளையில் தான்
மூளையில் உறைத்தது
இது பனி மூட்டம் அல்ல
ஹங் ஓவர் என்று......!


கத்தியை எடுத்தேன் 
சுற்றிலும் பார்த்தேன் 
குத்தினேன்
கிழிந்தது வயிறு
என்னிடமே டிக்கட்
வாங்கிவிட்டாயா என்று
கேட்டவனின் பஸ்
சீட்டிற்கு!

நீ என்னை 
காதலிக்கவில்லை 
என்றால் கூட 
பரவாயில்லை 
கனவில் 
என்னிடம் வாங்கிய 
முத்தங்களையாவது 
திருப்பி கொடு !

அன்பே இந்த 
காலத்து 
பிள்ளைகள் 
கருப்பு வெள்ளை 
புகைபடத்தை 
பார்த்ததே 
இல்லையாம் வா 
இருவரும் சேர்ந்து 
நிற்போம் !!

படித்த 
வகுப்பறையை 
மீண்டும் 
பார்க்கும் போது 
பார்வை அனிச்சையாக 
சென்றுவிடுகிறது அவள் 
அமர்ந்த இருக்கையின் 
பக்கம்!!

நேற்றோடு இன்று
வந்தது நேற்று 
தொலைந்தது !!

5 comments:

Unknown said...

கவிதை சூப்பர் நவீன்.நன்றி

மாலதி said...

கவிதை சூப்பர் நன்றி

தென்காசித் தமிழ்ப் பைங்கிளி said...

அனுபவம்தான் கவிதையின் வெற்றி..

Shavetharan said...

Excellent bro keep going��

Shavetharan said...

Excellent bro keep going��