1100
(டிஸ்கி 1:இது என்னோட மொத கதை கொஞ்சம் அப்படி இப்படி தான் இருக்கும் தலைவலி மாத்திரை போட்டுகிட்டாவது படிச்சி முடிச்சிடுங்க ) (டிஸ்கி 2:எங்கேயும் எப்போதும் விமர்சன்ம 130பேர் படிச்சதா கவுன்டர் காமிக்கிது ஆனா 13 comment தான் இருக்கு ஒரு கமென்ட் போட்டா குறைஞ்சா போய்டுவிங்க எப்புடி இருக்குன்னு சொல்லிட்டு போங்கப்பா ) செல் போனுக்கும் எனக்கும் அப்படியொன்றும் பூர்வஜென்ம பந்தம் எல்லாம் இல்லை.பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது தான் எனது ஆஸ்தான செல்போன் நோக்கியா 1100 அறிமுகம் கிடைத்தது. ஒரு நாள் கணக்கு வகுப்பில் பக்கத்தில் இருந்த பெண்ணை சீண்டிவிட்டு விட அவள் ஏற்கனவே ரெகார்ட் நோட் முடிக்காமல் இருக்க அதில் இருந்து தப்பிக்க இவன் தான் சரியான ஆள் என்று கணக்கு டீச்சரிடம் போட்டு கொடுத்தாள் அந்த டீச்சர் ஏற்கனவே அவர்களிடம் நான் டியூஷன் படிக்காமல் இருந்த கோபத்தோடு இதையும் சேர்த்து என்னை வெளிநடப்பு செய்யவச்சாங்க எனக்கு வேறு புகலிடம் கிடைக்காதால் வேறு வழியின்றி வீட்டிற்கே சென்று தஞ்சம் அடைந்தேன் வீட்டில் அம்மா சந்தேக கண்ணோடு பார்த்தாங்க. தினமும் பள்ளிக்கூடம் முடிந்து...