கஸல் கவித

(டிஸ்கி: இதையெல்லாம் கவிதைன்னு உனக்கு யார் சொன்னது அப்படின்னு நீங்க கேட்கலாம், கேட்கலைன்னாலும் அதான் உண்மை,வேணும்னா இதையெல்லாம் கவிதை version 1.0னு வச்சிக்கலாம் பியூச்சர் அப்டேட்ல சரி பண்ணிக்கலாம் ) பேருந்தில் என் மீது வீசும் உனது பார்வைக்கான அர்த்த புரிதல் இன்றி தவிக்கிறேன் கண்ணே சொல்லிவிடு என்னவென்று டிக்கட் வாங்க பணம் இல்லையா?! காலை கண் விழித்ததும் உறைத்தது வானிலை நேற்று போல் இல்லை இன்று ஒரே பனி மூட்டம் வசந்தகாலம் முன்னரே ஆரம்பித்துவிட்டது என மனம் மகிழ்ச்சி அடைந்த வேளையில் தான் மூளையில் உறைத்தது இது பனி மூட்டம் அல்ல ஹங் ஓவர் என்று......!